எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 15- சென்னை மாநகர் முன்னாள் மேயர் - சுய மரியாதை வீரர் சா.கணேசன் (வயது 88) 13.4.2018 அன்று இரவு 10.45 மணி அளவில் இயற்கை எய்தினார்.

திராவிட இயக்க முன்னோ டியின் மறைவுக்கு, கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, திராவி டர் கழகத்தின் சார்பில், சிறீ லட்சுமி நகர், வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கையினை சா. கணேசன் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், பேரா சிரியர் மா.செல்வராசன், கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் தெ.வீரமர்த்தினி, வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், இளைஞரணி அமைப் பாளர் க.கலைமணி, செம்பியம் அமைப்பாளர் தி.செ.கணேசன், சைதை தென்றல், செ.சின்ன ராசு, அசோக், வேணுகோபால், க.வெண்ணிலா, சி.இராவண தாசன், சி.பாஸ்கர், எம்.குமார் ஆகியோரும் கழகப் பொறுப் பாளர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

ஏராளமான திமுக தோழர் களும், தமிழின உணர்வாளர் களும், பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் ஏராளமானோர் இறுதி மரி யாதை செலுத்தினர்.

மாலை 4 மணிக்கு திமுக கொடிகளுடன் கூடிய வாகனத் தில் உடல் வைக்கப்பட்டு ஊர் வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. வளசரவாக்கம் இடு காட்டில் இறுதி நிகழ்வுகள் நடந்தேறின.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner