எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம், ஏப். 16, திராவிட மாணவர் கழக சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை -  மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்ஸ் மாடியில் 8.4.2018 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை யிலும், மாநில துணை செயலாளர் யாழ். பிரபாகரன் முன்னிலையிலும் நடை பெற்றது. அறிவுமணி வரவேற்புரை நிகழ்த்த, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், இந்த ஆண்டு முழுவதும் திராவிடர் கழக மாநாடுகள் ஆண்டாக திகழப் போ கின்றது. கணியூர், திண்டுக்கல், தருமபுரி, முத்தாய்ப்பாக கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட கழக மாணவர் அணி நடத்தும் பவளவிழா மாநாடு எழுச்சி முரசம் கொட்டப் போகின்றது. தொலைகாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம், அனைத்திலும் தந்தைப் பெரியார் அவர்கள் நுழைந்துவிட்டார் என்பது சமீபத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்கள் தெளிவு படுத்து கின்றது. மதம் சாதிக்கு அப்பாற்பட்ட  இப்போராட்டங்கள் தமிழ் இனத்திற்கே வழிகாட்டியாய் அமையப் போகின்றது. லட்சியத்தை நோக்கி லட்சம் மாணவர் களை இந்த ஆண்டிற்குள் ஒன்று சேர்த்து உலகம் வியக்கும் அளவிற்கு தமிழகத்தில் ஏதாவது ஒரு நகரத்தில்  நடத்திக் காட்டுவோம் என்று கூறினார். தீர்மானங்கள்

திராவிடர் கழக மாணவர் அணி  பவளவிழா மாநாட்டை சுவரெழுத்து, பதாகைகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்வது என்றும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முடித்துத் தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. தமிழக மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய மாநில அரசுகளின் தமிழின விரோதப் போக்கினை கண்டித்து தமிழர் தலைவர் அறிவிக்கும் அனைத்துப் போராட்டங் களிலும் பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப் பட்டது.  அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள அரசு சட்டக்கல்லூரியில் மோடி அரசின் பார்ப்பனத் தன்மையை வெளிக்காட்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை பல்கலைக் கழக துணைவேந்தராக தமிழக ஆளுநர் நியமிப்பதும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்ததும், கவின் கல் லூரியில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டவரை பேராசிரியராக நியமித்த ஆளுநரை வன்மையாக கண்டிக் கிறோம். பெரியாரை சுவாசிப்போம், பெரியா ரால் பெருவாழ்வு பெறுவோம், என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிடர்  மாணவர் கழக   பவளவிழா மாநாட்டிற்கு கழக சீருடையுடன் 300 மாணவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டு நிதி

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மாநாட்டு நிதியாக ரூ 8000- உரத்தநாடு குணசேகரன் அவர்களிடம் வழங்கப் பட்டது. மேலும் பெருவாரியான நிதியினை கழக தோழர்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த கூட்டத்தில் யாழ். திலீபன், ராசி. பிரபாகரன்,  கபிலன், தமிழ்ச் செல்வன், கு.திலீபன், மணிகண்டன், வீரகுமார், கருணாகரன், அரவிந்த், வசந்தம்- சு.வேலுசாமி, பாலசுப்பிர மணியம்,  பழ.அன்பரசு, மாநில ப.க. துணை செயலாளர் வீரமணி, சாலை வேம்பு சுப்பையன், வசந்தம்- பழனிசாமி, வசந்தம்- சந்திரன், ரங்கசாமி, செல்வராஜ், பன்னீர், அறிவுமணி, மேடூர் ராஜா, கோவை மாவட்ட தலைவர் குறிச்சி சிற்றரசு, லூக்காஸ் மற்றும் முப்பத் தைந்துக்கும் மேற்பட்ட மாணவர் அணி,  இளைஞர் அணி, திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.