எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 17- பகுத்தறிவாளர் கழகம் மாநிலப் பொறுப்பாளர் கள் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மா. அழகிரிசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் முன்னிலை யிலும் சென்னை பெரியார் திட லில் 15.4.2018 அன்று காலை சரியாக 10 மணிக்கு நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் மா.ஆறுமுகம் வர வேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் விளக் கினார். பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். மாநில திராவிட மாணவர் கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணையதளத்தில் நமது செயல்பாடு பற்றி பேசினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மேட்டுப் பாளையம் தரும.வீரமணி, ராயகிரி கே.டி.சி.குருசாமி, புதுச் சேரி மு.ந.நடராசன், மத்தூர் அண்ணா.சரவணன், காரைக் குடி மு.சு.கண்மணி, தாம்பரம் அ.தா.சண்முகசுந்தரம், துறை யூர் ச.மணிவண்ணன், ஆவடி மா.ஆறுமுகம் ஆகியோர் தங் கள் பொறுப்பு மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழக செயல் பாடுகள் பற்றி தெரிவித்தார்கள். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி வரும் காலங்களில் பகுத்தறிவாளர் கழகத்தின் இலக்குகளை விளக்கி பேசினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தமது உரையில், "பெரியார் ஆயிரம்" போட்டிகள் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற வேண் டும் என்றும், அதற்கு இப்போது முதல் திட்டமிட்டு செயல்பட வேண்டும். பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தனது உரையில்:- தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் ஆயிரம் போட்டிக ளோடு பேச்சுப் போட்டிகளை யும் பள்ளிகள் அளவில், மாவட்ட அளவில் நடத்திட ஏற்பாடு செய்திடல் வேண்டும். பகுத்தறிவாளர் கழகம் துண்ட றிக்கைககள் அச்சிட்டு பரப் புரை மேற்கொள்ளலாம் என வும் உறுப்பினர் சேர்க்கையை ஊக்கத்துடன் செய்திட கோரி யும் சிறப்புரையாற்றினார். மாதாந் திர கருத்தரங்குகளை பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் எல்லா மாவட்டங்களிலும் பகுத்தறிவாளர் கழகம் நடத் திட முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர் சேர்க்கை படி வம் மாவட்ட பொறுப்பாளர் களுக்கு வழங்குவதற்காக அளிக் கப்பட்டது. இதனை உடன் முடித்து மீண்டும் தலைமைக் கழகத்தில் துணைத் தலைவர் கள் மூலம் ஒப்படைத்திட வேண் டும் என கேட்டுக் கொள்ளப்பட் டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) மேனாள் மேயர் சுய மரியாதை வீரர் சா.கணேசன், பெரியார் பன்னாட்டு நிறுவன இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களின் அன்னையார் சரஸ் வதி, கோவை தென்மொழி ஞானபண்டிதன், மேனாள் தமிழக அமைச்சர் செ.மாத வன், காஷ்மீரில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்ட காஷ் மீர் 8 வயது சிறுமி ஆசிபா ஆகி யோர் மறைவுக்கு இக்கூட்டம் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

2) காஷ்மீரில் ஆசிபா என்ற 8 வயது சிறுமியை பாலியியல் வன்முறைக்கு ஆளாக்கி, படு கொலை செய்த பா.ஜ.க. குற்ற வாளிகளை நீதிமன்றம் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3) பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டினை செப்டம் பரில் தந்தை பெரியார் பிறந்த நாளினையொட்டி சிறப்பாக நடத்துவது என முடிவு செய் யப்படுகிறது.

4) மாவட்ட அளவில் உறுப் பினர் சேர்க்கையினை தலை மைக்கழகம் வழங்கியுள்ள படி வம் மூலம் முடித்து விரைவில் தலைமைக்கழகத்தில் ஒப்ப டைப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

5) மாவட்ட அளவில் பெரி யார் 1000 போட்டிகளை நடத்து வது என முடிவு செய்யப்படு கிறது.

6) பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் தங்கள் பொறுப்பு மாவட்டங் களில் சுற்றுப்பயணம் செய்து பகுத்தறிவாளர் கழக அமைப் புகளை வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

மாநிலத்துணைத் தலைவர் தாம்பரம் அ.தா.சண்முகசுந்தரம் நன்றி கூறினார். பார்வையாளர் களாக துறையூர் மா.சுப்பிரமணி யன், கி.சத்தியசீலன், தாம்பரம் ந.விஜய் ஆனந்த், வடசென்னை கோவி.கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.