எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில்  தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்

தாராபுரம்- பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தாராபுரம், ஏப். 18- -தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.4.2018 மாலை 4 மணியளவில் தாராபுரம் கழக மாவட்டம் கணியூர் ஓம் முருகன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

நிகழ்விற்கு மாநில பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலை வர் தரும.வீரமணி தலைமை தாங்கினார். தாராபுரம் கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழ கத் தலைவர் கவிஞர் ச.ஆறு முகம், மா.தங்கவேல் (பக), தி.வெங்கடா சலம்(பக) ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.

எதிர்வரும் மே 6ஆம் தேதியன்று கணி யூரில் நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்கும் தமிழர் தலைவர் அவர்களுக்கு தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் எடைக்கு எடை நாணயம் வழங் கிச் சிறப் பிப்பது, பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப் பினர் சேர்க்கையை தாராபுரம் கழக மாவட் டப் பகுதிகளில் தீவி ரப்படுத்துவது, கழக வெளியீடான "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" ஆங்கில மாத இதழுக்கு சந்தாக்களை பெரு மளவில் சேர்ப்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கலந்துகொண்டோர்

தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் வழக்குரைஞர் நா.சக்தி வேல், இளைஞரணித் தலைவர் நா.மாயவன், மடத்துக்குளம் ஒன்றிய கழக இளைஞரணித் தலைவர் க.அர்ச்சுனன், செயலாளர் முருகானந்தம், பொன்குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கூட்ட முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த உடுமலை த.முருகேசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner