எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாப்பாந்தாங்கல், ஏப். 20- திருவண்ணா மலை மாவட்ட அரசுப் பள்ளி மாண வர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கற்றல் திறன் குறைபாடு உள்ள மாண வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நூறு சதவீத கற்றல் இலக்கை அடைவ தற்கான முயற்சிகள் நடந்து வந்தது. இதற்காக, மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9 வரை படிக்கும் மாணவர்களை ஒருங் கிணைத்து, ஒரே நேரத்தில் தமிழ் படித் தல், எழுதுதல் நிகழ்ச்சியை நடத்தி உலக சாதனையில் இடம் பெறுவதற் கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் செய்தன. அதன்படி, மாவட்டத்தில் 470 மய்யங் களில் நேற்று 85,000 மாணவர்கள், 90,000 மாணவிகள்  என 1.75 லட்சம் மாணவர்கள் திரண்டனர்.  காலை 9.30 முதல் 9.45 மணி வரை, உலக தகவல், உள்ளூர் தகவல், விளையாட்டு தகவல் உள்ளிட்ட தகவல்களை அனைவரும் ஒரே நேரத்தில் தமிழில் படித்தனர். காலை 9.45 மணி முதல் 9.50 மணி வரை படித்த தகவல்களின் தலைப்பு களை தனித்தனி தாளில் மாணவர்கள் எழுதி முடித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சி 20 நிமிடங்கள் நடந்தது. திருவண்ணா மலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள பாப்பாந் தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 19.4.2018 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற தமிழ் வாசிப்பில் உலக சாதனை முயற்சி நிகழ்வில் இப்பள்ளி மற்றும் ஆராத்தி வேலூர், சிறுங்கட்டூர், ராமகிருஷ்ணபுரம் ஆகிய அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் 294 பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுத லின்படி முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஜெயக்குமார் அவர்களின் முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஆர்.மகேஷ், ஆசிரியர்கள் எம்.கவுதமன், எஸ்.ருத்திராயன், கே.அருள், இ.தேவசேனா, பி.சுஜாதா, ஜெ. சியாமளா, வி.வெங்கட்ராமன், பி.சின் னதுரை ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner