எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, ஏப். 22 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 13.4.2018 அன்று மாலை 6 மணியளவில் நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் அவரது இல்லத்து மாடியில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட இளைஞரணி தலை வர் அ.தனபால் தலைமையேற்று உரை யாற்றினார். மண்டல இளைஞரணி செய லாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரெ.சப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர்.

உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதனை தொடர்ந்து மண்டல இளைஞரணி செய லாளர் இரா.வெற்றிக்குமார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன் பரசு, மண்டல மாணவர் கழக செயலாளர் அண்ணா மாதவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா.கதிரவன், நகர இளை ஞரணி தலைவர் பு.செந்தில்குமார், கண் ணந்தங்குடி இளைஞரணி தலைவர் பு.ராஜதுரை, பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, நகரச் செயலாளர் ரெ.ரஞ்சித், நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், கருவிழிக்காடு மாணவரணி அமைப்பாளர் சு.இனியவன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், ஒன்றிய செய லாளர் அ.உத்திராபதி, ஒன்றிய தலைவர் மா.ராசப்பன், கண்ணை கிழக்கு த.ஜெகனாதன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் ந.ராமகிருட்டிணன், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பெரியார் நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். நகர துணைச் செய லாளர் சி.மாரிமுத்து, கிழக்கு பகுதி இளை ஞரணி செயலாளர் அறிவரசு, ஒன்றிய துணை செயலாளர் ந.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழக பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் கவிஞர் துரை.சித்தார்த்தன், வட சேரி புண்ணியகோடி ஆகியோரது மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2) விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பினையேற்று, உண்மை இதழுக்கு உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி சார்பில் 100 உண்மை சந்தாக்களை வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்து வது என தீர்மானிக்கப்படுகிறது.

4) கும்பகோணத்தில் ஜூலை 8 அன்று நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒத்துழைப்பு வழங்கு வதோடு ஏராளமான தோழர்களை பங்கேற்க செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.

5) உரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கலந்துரையாடல் வட்டம் மற்றும் அனைத்து ஊர்களிலும் தெருமுனைக் கூட்டம் நடத்துவதென தீர் மானிக்கப்படுகிறது.

6) தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சி னையானகாவிரிநதிநீர் பங்கீட்டுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப் பினை அமல்படுத்த வேண்டுமாய் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

7) மே 29 அன்று பட்டுக்கோட்டையில் திக்கெட்டும் பாய்வோம். திராவிடத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் தஞ்சை மண்டல திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டிற்கு உரத்தநாடு ஒன்றி யத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங் குவதோடு ஏராளமான தோழர்களை பங் கேற்க செய்வது எனவும், இந்த மாநாட்டை விளக்கி உரத்தநாடு ஒன்றியத்தில் சுவரெ ழுத்து விளம்பரம் செய்வதென தீர்மானிக் கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner