எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆத்தூர், ஏப். 25- சேலம் மாவட் டம் ஆத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை விழா பொதுக் கூட்டம் ஏப்ரல் 17 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் த.வானவில் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் விடுதலை சந்திரன், மாநில இளைஞரணி துணைசெயலா ளர் சுரேஷ், மாவட்ட செய லாளர் நீ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் கோபி இமயவரம்பன் வர வேற்புரை ஆற்றினார். தொடர்ந்து எழுத்தாளர் வே.மதிமாறன், அண்ணல் அம்பேத்கர் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும், இந்துமத எதிர்ப்பு, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ செயல்கள் குறித் தும்  சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.

மேலும் இப்பொதுக்கூட் டத்திற்கு தோழமை கட்சி களான கே.பாலசுப்ரமணியம் (தி.மு.க) கோபால்ராசு (மதி முக) ஓசுமணி( காங்கிரஸ்) காளிமுத்து (தமாகா)  ராமு மனித உரிமை இயக்கம், நீதி மான், ஜெயராமன், பெரியார் தாமு, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அறிவுச் செல்வம், தமிழ் பிரபாகரன், முருகானந் தம், ரவிக்குமார், வினோத் குமார், பெரியசாமி, சம்பத், மாணவரணி தோழர்கள் பிரவீன், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்த னர். நகரச் செயலாளர் தா. திவாகர் நன்றியுரை ஆற்றி னார்.