எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 29, தந்தை பெரியாரின் தத்துவங் களை கலைவடிவத்தில் கொண்டு செல்லும் நோக் கத்திற்காக கழகத் தோழர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது என்று பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டார்

சென்னை பெரியார் திடலில் 28.4.2018 மற்றும் 29.4.2018 ஆகிய இரண்டு நாட்கள் பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் சார்பில் வீதிநாடக, ஓரங்க நாடக பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. கலைத்துறையின் மாநில செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையை திராவிடா கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில்: காலத்திற்கேற்ப, மக்களின் ரசனைக்கேற்ப நமது பிரச்சார முறைகளில் மாற்றம் வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகள் யாராலும் தோற்கடிக்கப்படாததாக இருந்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டும். அதுவும் இந்துத் துவம் கொடூரமாக ஊடுருவ முயலும் இந்த வேளையில்! ஆகவே கலை வடிவில் நிச்சயமாக இதை சாதிக்க முடியும். தோழர்கள் இரண்டு நாள் பயிற்சியில் நன்றாகக் கற்றக் கொண்டு, தந்தை பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுவார் என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து இதழாளர் கோலி.லெனின் அவர்கள் கலைத்துறையின் அவசியத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வாழ்த்திப் பேசினார். முன்னதாக பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பில் தெற்கு நத்தம் சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த பயிற்சிப்பட்டறையில் 22 மாண வர்கள் பங்கேற்றனர். தெற்கு நத்தம் சித்தார்த்தன் தலைமையில் வீதிநாடக மாநில அமைப்பாளர் பெரியார் நேசன், ஓரங்க நாடக மாநில அமைப்பாளர் கனகா, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில குறும்பட அமைப்பாளர்கள் கி.தளபதிராஜ், உடுமலை வடிவேல் மற்றும் சு.குமரவேல் ஆகியோர் பயிற்று நர்களாக பங்கேற்றனர்.