எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் திராவிட மாணவர் கழகப் பவள விழா - மாநில மாநாடு

பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு பெறுவோம் - முழக்கத்தோடு!

மாவட்டம் தோறும் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடலில் தீர்மானம்

 

கிருட்டினகிரி

கிருட்டினகிரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் 21.4.2018 அன்று மாலை 5 மணியளவில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் மு.துக்காராம் இல்லத் தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் தலைமை வகித்துப் பேசினார். கிருட்டினகிரி மா.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழக மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.துக்காராம், மாவட்ட கழகச் செயலாளர் கோ.திராவிடமணி, தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், கிருட்டினகிரி நகர தலைவர் மே.மாரப்பன், செயலாளர் கா.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் திராவிட மாணவர் கழகம் தொடக்கம் பற்றி யும், செயல்பாடுகள் குறித்தும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரது அரும் பெரும் பணிகளை விளக்கியும்  வருகின்ற ஜூலை 8.7.2018 அன்று கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக மாநில பவள விழா மாநாட்டின் நோக்கங்கள் குறித்தும் சிறப்புரை யாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.செயராமன் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது பெரும் பணிகளை விளக்கி சிறப்பு கருத்துரையாற்றினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப் பினர் தா.சுப்பிரமணியம், மாவட்டத் துணைத் தலைவர் த.அறிவரசன், தருமபுரி மண்டல இளைஞரணி செயலா ளர் வ.ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் இ.லூயிசுராஜி, மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப் பாளர் சா.ஜோதிமணி, மாவட்ட இளைஞரணி செயலா ளர் வே.புகழேந்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செய லாளர் எல்.அய்.சி. மனோகர், கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர் கி.வேலன், மத்தூர் இரா.பழனி, திருநாவுக் கரசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.  கூட்டத்தில் க.கா.வெற்றி, க.கா.சித்தாந்தன், மனோ.கதிரவன், மனோ. நிலவன், மா.தமிழ்மணி. அஜித்குமார், எம்.சதீஷ், ஆர்.தமிழரசன், இரா.மணிமேகலை, மா.சிறீதேவிகா, எஸ்.பெரியசாமி, டி.முத்துச் செல்வம், தா. அங்குகரன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.                 கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: தீர்மானம் 1:. வருகின்ற ஜூலை எட்டாம் தேதி குடந்தையில் பெரியாரை சுவாசிப்போம், பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு கிருட்டினகிரி மாவட்டத்திலிருந்து 150 மாணவர்கள் தனி பேருந்தில் பங்கேற்பது என தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் 2: மாநில மாணவர் கழக பவள விழா மாநாட்டினை விளக்கி சுவரெழுத்து செய்வது, உள்ளுர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: மாநில மாணவர் கழக பவள விழா மாநாடு சிறப்படைய தலைமை கழகம் அளித்துள்ள நன்கொடை தொகையினை திரட்டித் தருவது என தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானம் 4: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்:   மாவட்டத் தலைவர் க.கா.வெற்றி, மாவட்டச் செயலாளர் சி.அஜித் குமார், மாவட்ட அமைப்பாளர் மா.கதிரவன், மாவட்டத் துணைத் தலைவர் தங்கமுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் பகலவன், கிருட்டினகிரி நகர மாணவர் கழக அமைப்பாளர் மா.தமிழ்மணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் இரா.மணி மேகலை உள்ளிட்ட மேற்கண்ட புதிய பொறுப்பாளர்களை திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு .இரா.குணசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

கிருட்டினகிரி மாவட்ட மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டத்தில்  திராவிட மாணவர் கழகப் பவள விழா - மாநில மாநாட்டிற்கு நன்கொடை வழங்கியவர்கள்: மாவட்டத் தலைவர் மு.துக்காராம் ரூ. 1000-, தருமபுரி மண்டலத் தலைவர் ரூ. 1000-, கிருட்டினகிரி நகர செய லாளர் கா.மாணிக்கம் ரூ. 1000-, பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் ரூ. 500-, மாவட்டத் துணைத் தலைவர் த.அறிவரசன் ரூ. 500, கிருட்டினகிரி நகரத் தலைவர் மே.மாரப்பன் ரூ. 500-, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் எல்.அய்.சி.மனோகர் ரூ. 500- ஆகியோர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் மாநாட்டிற்கு நன்கொடை வழங்கினர்.

தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் திராவிட மாணவர் கழகம் உதயம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக திராவிட மாணவர் கள் சந்திப்புக் கூட்டம் 25.4.2018 அன்று மாலை 5 மணிக்கு புதிய வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு நெல் லுப்பட்டு அ.இராமலிங்கம் இல்லத்தில் நடைபெற்றது.

அக்ஸீலியம் பள்ளி மாணவர் இரா.கவிநிலவு வர வேற்றார். மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் ந.காவியன் தலைமை வகித்தார்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தந்தை பெரியாரின் பேருழைப்பால் பெண்கள் பெற்றிருக்கும் சமவாய்ப்பு, சம உரிமைகள் தமிழர் தலைவர் அவர்கள் போராடி பெற்றுத்தந்த இட ஒதுக்கீடு, திராவிட மாணவர் கழகம் மேற்கொண்டுவரும் உரிமைப் போராட்டங்களை விளக்கி சிறப்புரையாற் றினார். மாணவர் தத்தமது பார்வையில் அறிவாசான் தந்தை பெரியாரின் உழைப்பின் சிறப்பினை எடுத்து ரைத்து திராவிட மாணவர் கழகத்தில் தங்களை இணைத் துக் கொள்வதாக கூறினார்.

மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விசயகுமார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், நகர மாணவர் கழக தலைவர் க.இந்திரா, மாவட்ட துணைச் செயலாளர் ச.சிந்தனைஅரசு, நகர துணைச் செயலாளர் விடுதலையரசி ஆகியோர் உரையாற்றினர். மாணவர் கழக தலைவராக பொறுப்பேற்றுள்ள சங்கர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: க.சங்கர், துணைத் தலைவர்: சே.மைதிலி, செயலாளர்: கி.லதா, துணைச்செயலாளர்: மோ.தேன் மொழி, இணைச் செயலாளர்: அ.சரண்யா, அமைப்பாளர்: சு.மாதுக்கண்ணன், பொருளாளர்: க.புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்: பேரா.இராசலட்சுமி.

நிகழ்ச்சியில் மாவட்ட திராவிட மாணவர் கழக இணைச்செயலாளர் சற்குணம், தா.அங்குகரன், மருது பாண்டியர், கல்லூரி தலைவர் ஜோ.அருண்குமார், புலவர் இரா.மோகன் அரசு உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கடலூர்

கடலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 20.4.2018 மாலை 6.30 மணிக்கு ஓட்டல் துரை கூட்ட அரங்கில் கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் ச.வீரமணி வரவேற்றார். திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார்.

தலைமையேற்று சிறப்புரையாற்றிய முனைவர் துரை.சந்திரசேகரன் கடலூர் மண்ணில் பிறந்த தமிழர் தலைவரின் பேச்சாற்றல், உழைப்பாற்றலை எடுத்துக் காட்டி மாணவர்கள் தந்தை பெரியாரின் இலட்சியப் பாதையில் அணிவகுக்க வேண்டுமென கேட்டுக் கொண் டார். 24ஆம் தேதி அமெரிக்கா செல்லும் கழகப் பொதுச் செயலாளருக்கு அவரது மாணவர் கழக தோழர்களின் சார்பில் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில திராவிடர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில துணைச்செயலாளர் த.யாழ்திலீபன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், மண் டல இளைஞரணி செயலாளர் மணிவேல், மாவட்டக் கழக அமைப்பாளர் அன்பு திராவிடன், நகர தலைவர் க.எழிலேந்தி, செயலாளர் இரா.சின்னதுரை, சுகுமாறன், மாணவர் கழக தா.பெரியார்செல்வன், திராவிடன், எஸ். ஓவியா, ச.அறிவழகன், கோபால் ஆபரன், க.தாயன்பன், தி.தாய்மொழியன், அ.ஆனந்தசெல்வன், ச.அறிவழகன், க.தரணிதரன், புகழேந்தி ர.லோகநாதன், டிஜிட்டல் இராமநாதன், உரந்தை அங்குதரன், பிரேம்குமார் ஆகி யோர் தத்தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: க.தாயன்பன், துணைத்தலைவர்: க.தரணி தரன், செயலாளர்: தா.பெரியார்செல்வம், துணைச் செய லாளர்: அ.ஆனந்தசெல்வன், இணைச் செயலாளர்: தமிழ் மணி, அமைப்பாளர்: தி.தாய்மொழியான், பள்ளி மாண வர் கழக அமைப்பாளர்: சு.ஓவியா.

சேலம்

சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிட மாண வர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.4.2018 அன்று மாலை 6 மணிக்கு சேலம் அம்மாப்பேட்டை தமிழாசிரி யர் கழக அரங்கத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

மண்டல திராவிட மாணவர் கழகச் செயலாளர் இ.தமிழர்தலைவர் வரவேற்புரையாற்றினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் தலைமை வகித்து கருத்துரை வழங்கினார். சேலம் மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் அமைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவர் பா.திவ்யபாரதி, பசும்பால் உண்ணும் பார்ப்பன நரியே

தமிழ்நாட்டில் விதைக்கப் பார்க்கிறாய் வஞ்சக விதையை!

புலிப்பால் உண்ட திராவிடன் மண் போதும் உன்னை

முறத்தால் துரத்தும் நேரம் வெகு விரைவே

குடந்தையாக கருப்புச்சட்டை மாணவர் கூட்டம்- பார்ப் பனர்களை தெறிக்கவிட்டு பாடங்கள் புகட்டும் என உணர்ச்சி தெறிக்க கவிதை பாடினார்.

சட்டக் கல்லூரி மாணவர் கழக செயலாளர் கங்கா தேவி, கோடை வெப்பம் நம்மை வாட்டி வதைக்கிறது, கோட்சே குரூப்பும் தமிழினத்தை ஆட்டிப்படைக்கப் பார்க்கிறது. மோடிக்கு பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை. பேஸ்புக், வாட்சப் இண்டர்நெட் மூலம் கருத்தை பதிவிட்டு வெற்றி காண்போம் என முழங்கினார்.

சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழக தலைவர் கோ.விக்னேசுவரி சூலை எட்டாம் தேதி பெரியாரை சுவாசிப்போம், பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாணவர் கழக மாநில பவள விழா மாநாட்டில் நமது தமிழர் தலைவர் அவர்கள் நடுநிலையாக மேடையில் அமர்ந்து எங்களை யெல்லாம் பார்த்து மகிழ்ச்சி பெருமூச்சுவிடும் காட்சியை நான் இப்போதே நினைத்து பெருமையடைகிறேன். எங்கள் சட்டக் கல்லூரி சார்பில் 150 மாணவிகள் பங்கேற் போம் என அனைவரின் கைத்தட்டலுக்கிடையே உரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில திராவிட மாண வர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வ.தமிழ்பிரபா கரன், மண்டல கழக தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன், மண்டல கழக செயலாளர் அ.ச.இள வழகன், சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவகர், மாவட்ட செயலாளர் கடவுள் இல்லை கி.சிவக்குமார், மேட்டூர் மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், ஆத்தூர் மாவட்ட ப.க. தலைவர் வ.முருகானந்தம், மண்டல இளைஞரணி செயலாளர் கே.செல்வம், ஓமலூர் ஒன்றிய தலைவர் சவுந்திராசன், எடப்பாடி நகர திராவிடர் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், திருப்பூர் மகேஸ் வரன், வெந்தாரப்பட்டி அ.இலக்குமணன், பட்டுத்துறை இரா.அகஸ்டின், இராசேசுகுமார், சே.பிரபாகரன், எஸ். தங்கவேலு, செந்தமிழ்ச்சேரன், ஆத்தூர் மாவட்ட மாண வர் கழக செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் சே.ஜான்சிராணி, ஈரோடு பா.வைரம் ஆகியோர் கருத் துரை வழங்கினார்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார். மூன்று மாவட் டங்களின் சார்பில் 500 மாணவர்கள் பங்கேற்பது உள் ளிட்ட தீர்மானங்களை சென்னை சட்டக் கல்லூரி மாண வர் கழக செயலாளர் பிரவீன்குமார் வாசித்தார். சேலம் பா.வெற்றி நன்றி கூறினார்.

நன்கொடை வழங்கியோர்

பழநி.புள்ளையண்ணன் ரூ. 2000, அறக்கட்டளை உறுப்பினர் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் கோ.விக்னேசுவரி ரூ. 1000, திருப்பூர் மகேசுவரன், இராசதுரை அகமது அணிஷ் ரூ. 500,  புதிய பொறுப்பாளர்கள்

ஆத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம்

தலைவர்: தமிழ்ச்செல்வம், துணைத் தலைவர்: கார் முகிலன், செயலாளர்: சக்திவேல், துணை செயலாளர்: அ.இலட்சுமணன், அமைப்பாளர்: சே.ஜான்சிராணி.

திருவாரூர்

14.4.2018 அன்று காலை 11 மணிக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் நாத்திக பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் தலைமை வகித்து கருத்துரை வழங்கினார்.

திராவிட கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தத்துவங்களை தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மண்டல திராவிடர் கழக செயலாளர் கிருட்டிணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இராயபுரம் இரா.கோபால், மாவட்டத் துணைத் தலைவர் அருண்காந்தி, மாவட்ட செயலாளர் காமராசு, மாவட்ட துணைச் செயலாளர் வீர.கோவிந்தராசு, திருவாரூர் நகரத் தலைவர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் சுரேசு, திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்ட செயலாளர் சு.பொன்முடி, விக்ரவாண்டியம் வீ.புட்பநாதன், தி.பால கிருட்டிணன், கோ.பிளாட்டோ, மாணவர் கழகத் தோழர் கள் சு.தீனதயாளன், அ.உமாநாத், வீ.வினோத், பா.அறி வுக்கரசு, செ.தமிழரசு, ச.சற்குணன் ஆகியோர் மாநாடு வெற்றிபெற தமது பங்களிப்பை உறுதி செய்தனர். நிறைவாக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்கொடை வழங்கியோர்

திருவாரூர் மாவட்டத் துணைத் தலைவர் அருண்காந்தி ரூ.1000, திருவாரூர் நகரத் தலைவர் மனோகரன் ரூ.500.

திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: சு.தீனதயாளன், செயலாளர் வீ.வினோத், அமைப்பாளர்: பா.அறிவுக்கரசு.

திருத்துறைப்பூண்டி மாவட்ட மாணவர் கழகம்

தலைவர்: அ.உமாநாத், செயலாளர்: ம.பெரியார் தாசன், அமைப்பாளர்: தேவராசன்

நாகப்பட்டிணம்

நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 14.4.2018 இரவு  எட்டு மணிக்கு திரு மருகல் பெரியார் முரசு இல்லத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் நாத்திக பொன்முடி வரவேற்று உரையாற்றினார். மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் தலைமை வகித்து கருத்துரை வழங்கினார். மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சி.பி.க.நாத்திகன் பேச்சாளர் பெரியார்முரசு, நாகை மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர் வே.இராசேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், கி.சுரேசு, நா. பொய்யாமொழி, நா.சாக்ரடீசு, செ.பாக்கியராசு, வெ.தீபன் சக்ரவர்த்தி, ச.அமுதன், ச.அதியன், கு.குட்டிமணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொடர்ந்து திரா விடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைக்கு கிடைத்துவரும் வெற்றிகளை, தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினை எடுத்துக் கூறி உரையாற்றினார். பின்னர் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: செ.பாக்கியராசு, செயலாளர்: கா.குமரேசன், அமைப்பாளர்: சி.அருண்குமார், துணைத் தலைவர்: கோலியச்செல்வன்

திருமருக ஒன்றியம்

தலைவர்: ச.அமுதன், செயலாளர்: மு.குட்டிமணி

திருமருகல் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் மாநாட்டிற்கு ரூ. 1000 நன்கொடை வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner