எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோழர்களே,

இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் ராஜஸ்தான் மாநிலம்,  ஆஜ்மீர் பிரம்மா கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார்!

பழைய மத்திய அமைச்சர் எஸ்.வி. இராமசாமி (அவர் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது அர்ச்சகர் விபூதி - பிரசாதத்தை தூக்கி வீசினார் இவரிடம்; (அப்போது திரு. பக்தவத்சலம் அறநிலையத்துறை அமைச்சர்.)  அமைச்சரவையில் பெரிய புயலைக் கிளப்பியது அது. அவராவது மத்திய அமைச்சர், இப்பொழுது இந்தியா வின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கே அவமானம் இழைக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டில் உட்கார்ந்து பக்திப் பூஜை செய்து, அவமானத்தையே 'வரப்பிரசாதமாக வாங்கிக் கொண்டு குடியரசுத் தலைவர் திரும்பிய செய்தி கேட்டு சமூகநீதி, சுயமரியாதை, மானஉணர்வு, மனித உரிமை மீது அக்கறை  உள்ளவர்களின் உள்ளங்கள் கொதிக்கின்றன. அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம், ஒரு தேசிய அவமானம் என்பதை பெரியார் மண் சுட்டிக் காட்டி 7.6.2018 அன்று  சென்னை துவங்கி  அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் தவறாது கலந்து கொள்ளுங்கள் தோழர்களே! தன்மான தமிழர்களே!

அவசரம்! அவசரம்! அனைவரும் ஆதரவு தாருங்கள்.

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

5.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner