எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜூன் 6- காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில், மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பூமி நாதன் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில், வெளிநாடு வாழ் உஞ்சனை  இளைஞர்களால் நடத்தப்படும் கிழக்கு உஞ்சனை பொது நல சேவா சங்க நூலகத்திற்கு திராவிடர் கழக நூல்கள் முதல் தவணையாக 40 எண்ணிக்கைகள் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ஆகியோர் வழங்கினர்.

மாவட்ட கழகம் சார்பில் நூலகத்துக்கு  விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஏடுகளுக்கு சந்தா வழங்கப்பட்டது.

நிகழ்வில்  காரைக்குடி நகர தலைவர் ந.ஜெகதீசன், நூலக  தலைவர் அழகர்சாமி, செந்தில், காளிதாஸ், முத்து, சுந்தர், மனோஜ், சோமசுந்தரம், சுந்தர் குமார், விக்னேஷ், காசி, சங் கர், மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நூலகம் எழுச்சி தலை வர் தொல்.திருமாவளவன் அவர்களால் 29.6.2015-இல் திறந்து வைக்கப்பட்டதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner