எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசியல் ஆவணப்படங்கள் - பயிற்சிப்பட்டறை

அரசியல் ஆவணப்படங்கள் பற்றிய ஒரு அறிமுகம், அதன் பன்னாட்டு, இந்திய, மாநில அளவிலான வரலாறு, அதன் வகைகள், அதற்கான இன்றைய தேவை, தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழல், ஆவணப் படங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நமது கூட்டுச் செயல்பாட்டிற்கான திட்டமிடல் என்கிற தலைப்பு களில் 9 அமர்வுகள் கொண்ட, ஆவணப்பட இயக்குனர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறையில் ஆர்வம் இருப்போரை கலந்து கொள்ள அழைக்கிறோம். இது தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை அல்ல. கருத்தியல் ரீதியாக, ஒன்றிணைவதற்கான, ஆவணப்படங்களுக்கான ஒரு மேடையை உருவாக்க எடுக்கப்படும் முயற்சி.

இதில் ஆவணப்படங்களை இயக்குவோர், திரையிடுவோர், பயன்படுத்துவோர், பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

அம்ஷன்குமார், கேபி சசி, தீபு, ஆர்.ஆர்.சீனிவாசன், கோம்பை அன்வர், சோமீதரன், திவ்யபாரதி, ஆர்.பி.அமுதன் ஆகிய ஆவணப்பட இயக்குனர்கள்  தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விருக்கின்றனர்.  பேராசிரியர் ஆ.மார்க்ஸ், வழக் குரைஞர் அ.அருள்மொழி, களப்பணியாளர் வனேசா பீட்டர், வழக்குரைஞர் கி.நடராஜன் ஆகியோரும்  கருத்துரை வழங்க வுள்ளனர்.

30 பேர் மட்டுமே பங்கேற்கமுடியும்.

முன்பதிவு செய்தல் அவசியம்.

பதிவுக்கட்டணம்: ரூ.300/- (மதிய உணவு & தேநீருக்கானது)

தொடர்புக்கு : 9940489230

நாள்: 29, 30 ஜூன் & 1 ஜூலை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை

ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை & மறுபக்கம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner