எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 14 வடசென்னை பகுத் தறிவாளர் கழகம் சார்பில் சென்னை அயனாவரம் கிங் மேக்கர் அரங்கில் புரட்சிக் கவிஞர் விழா, 39ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி. கோபால் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை மண்டல செயலாளர் தே. செ.கோபால்,  வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், மு.இரா.மாணிக்கம், வீ. இராசசேகரன் ஆகியோர் முன்னிலை யில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இரா. சண்முகநாதன் வரவேற்புரையாற்றுகிறார். மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைச் செயலாளர் மு.பழனி தொடக்கவு ரையாற்றுகிறார்.

மாலை 5 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ‘கலை அறப் பேரவை’ மு.கலைவாணன் வழங்கும் ‘மதித்துப் போற்று’ தலைப்பில் புதுமையான பொம் மலாட்டம் நிகழ்ச்சி, இரா. சிநேகா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் கல்வி வள்ளல் காமராசர் படத்தைத் திறந்து உரையாற்றுகிறார்.

மாலை 6 மணிக்கு பாராட்டரங்கத்தில்  திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியர் பொம் மராஜுப்பேட்டை பகவான் பாராட்டு பெறுகின்றார். மறைந்த கவிஞர் தமிழ்ஒளிக்கான புரட்சிக்கவிஞர் விருதை செ.து.சஞ்சீவி பெறுகிறார்.

கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத் தறிவாளர் கழக மாநில துணை தலைவர் மா.ஆறுமுகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில செயலாளர் (கல்லூரி, பல்கலை.) பேராசிரியர் சிறீ.அருள்செல்வன் ஆகி யோர்  பாராட்டுரையாற்றுகிறார்கள்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புரட்சிக்கவிஞர் விருது வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.

விழா முடிவில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா.இராமு  நன்றி கூறுகிறார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார்.

பிற்பகல் 3 மணிக்கு மகளிருக்கான “சிந்தனைச் சோலை பெரியார்” வினா-விடைப் போட்டியை இதழாளர் கோவி. லெனின் தொடங்கி வைக்கிறார். பகுத் தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆ.வெங்கடேசன் மாணவர் களுக்கான பேச்சுப்போட்டியை தொடங்கி வைக் கிறார். இரவு 8 மணிக்கு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் புரட்சிக் கவிஞர் விழா நிறைவு பெறுகின்றது.

விழா ஏற்பாடுகளை வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner