எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(சில மாறுதல்களுடன்)

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும், வெகுமக்கள் மத்தியிலும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 கி(லீ) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் இரண்டு கட்டமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

முதற்கட்டமாக நாகர்கோவிலில் தொடங்கி விழுப்புரம் வரை 22.8.2018 முதல் 28.8.2018 வரையிலும், இரண்டாவது, மூன்றாவது கட்டமாக அரியலூரில் தொடங்கி சென்னை முடிய 1.9.2018 முதல் 11.9.2018 வரை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம்

நாகர் கோவில் முதல் விழுப்புரம் வரை - முதல் கட்டப் பயணம்

அரியலூர் முதல் சென்னை வரை - இரண்டாம் கட்டப் பயணம்

சொற்பொழிவாளர்கள்

சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்), இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர்)

ஒருங்கிணைப்பாளர்கள்

வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ப.சுப்பிரமணியம் (தலைவர், பெரியார் வீரவிளையாட்டு கழகம் )

மருத்துவக்குழு

டாக்டர் இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மெடிக்கல் மிஷன்)

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டியவை

1. கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி பெறுதல்.

2. ஒவ்வொரு கூட்டத்திற்கும் தனி மேடை ஒலி, ஒளி அமைப்பு செய்திட வேண்டும்.

3. கூட்ட மேடையில் டீப்பாய், மின்விசிறி, ஏர்கூலர் இருக்க வேண்டும்.

4. பிரச்சாரப் பயணத்தை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம், விளம்பர தட்டிகள் வைத்தல், கழக கொடிகளை பெருமளவில் கட்டுதல் வேண்டும்.

5. அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்தல் கூடாது.

6. இரவு தங்கும் இடங்களில் 30 நபர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.

7. தமிழர் தலைவர் அவர்களை வரவேற்கும் இடம் மற்றும் கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைக் கழகத்திற்கு முன்கூட்டியே தெரியப்படுத்திட வேண்டும்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner