எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.25 திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 7.8.2018 அன்று மறை வுற்றார். அவர் மறைவையடுத்து, தமிழகம்முழுவதும் மட்டுமல் லாமல் பன்னாட்டளவில் நன்றி யுணர்வுடன் தமிழர்கள் ஜாதி, மத, கட்சி பேதமின்றி பல்துறையினரும் ஒன்றிணைந்து கலை ஞருக்கு நினைவேந்தல் நிகழ்வு களை நடத்திவருகிறார்கள்.

சென்னை பெரியார் திடலில் கலைஞருக்கு நீதிபதிகள் பங்கேற் கின்ற நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழக சட்டத் துறை சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 31.8.2018 வெள்ளிக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறு கிறது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  வர வேற்புரையாற்றுகிறார். கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி இணைப் புரை வழங்குகிறார்.

நீதிபதிகள் பங்கேற்கின்ற நினைவேந்தல் சிறப்புக்கூட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்று நினைவேந்தல் உரை யாற்றுகிறார்.

உச்சநீதிமன்ற மேனாள் நீதி பதி எஸ்.மோகன், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன், குஜராத் உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ் ணன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சாமிதுரை, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன், சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.கே.வாசுகி ஆகியோர் கலைஞர் பணிகளை நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரையாற் றுகிறார்கள்.

கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீர சேகரன் நன்றி கூறுகிறார்.