எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஆக. 28- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழக அலுவலகமான என்.ஆர்.சாமி.மாளிகையில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநில ப.க.தலைவர் மா. அழகிரிசாமி, மண்டல தலை வர் சாமி.திராவிடமணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா, நகர செயலாளர் தி.கலைமணி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, மேனாள் நகர தலைவர் தி.தமிழமுதன், மாவட்ட ப.க.தலைவர் எஸ். முழுமதி, ப.சுந்தரம், கோட் டையூர் நகர அமைப்பாளர் சீ. மணிவண்ணன், பொன்னமரா வதி சரவணன் ஆகியோர் உரை யாற்றியபின் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் விடுதலை சந்தாக் களை சேகரிப்பது குறித்தும், இந்த கால கட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது அதை நாம் எவ்வாறு சமூகத்திற்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறி விரி வாக பேசினார்.

தீர்மானங்கள்

1) மானமிகு சுயமரியாதைக் காரர் என்று தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டவரும் தி.மு. கழக தலைவருமான முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்கும், சிவகங்கை நகர கழக தலைவர் இர.புகழேந்தி தந்தையார் இரஜபதி,கல்லல் ஒன்றிய ப.க.தலைவர் பட்ட மங்கலம் கரு.சோமையா ஆகி யோர் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத் தப்பட்டது.

2)  20.8.2018 அன்று சென் னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் முடி வுகளை அப்படியே ஏற்று செயல்படுத்துவது.

3) அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாளை காரைக் குடி கழக மாவட்டத்தில் எழுச் சியோடு சிறப்பாக கொண்டாடு வது என்று முடிவு செய்யப் பட்டது.

4) மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட 100 சந்தாக்களை முதற் கட்டமாக முடித்து தந்து இலக் கினை எட்டுவது என்றும் தீர் மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் முதல் தவணையாக விடுதலை நாளிதழ் ஒரு ஆண்டு சந்தா

5) அரையாண்டு சந்தா

6) ஆகிவற் றிற்கான தொகை ரூ 12960&அய் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் மாவட்ட பொறுப் பாளர்கள்  வழங்கிட கூட்டம் நிறைவுபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner