எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செப்டம்பர் 23 முதல் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மேற் கொள்ளப்படவிருந்த நான்கு கட்ட சுற்றுப்பயணம் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

விடுதலை' சந்தா சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெறுவதாலும், இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் கழகத் தோழர்கள் மும்முரமாகவும், தீவிரமாகவும் ஈடுபட வேண்டியதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் 5,000 விடுதலை' ஆண்டு சந்தாக்களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் எஞ்சிய 5,000 விடுதலை'  ஆண்டு சந்தாக்களையும் திரட்டித் தருவதில் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், கழகத்தின் அனைத்து அணிகளையும் சேர்ந்தவர்கள் முனைப்பும், முழு ஆர்வமும் காட்டி - நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது'' என்ற முழக்கத்தை செயலில் வெற்றியாக்கித் தருமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது முக்கியம்! மிக மிக முக்கியம்!!

 

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

31.8.2018