எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பத்தூர், ஆக. 31 திருப் பத்தூரில் 27.8.2018 அன்று இரவு 7.30 மணிக்கு விடுதலை சந்தா சேர்ப்பு கூட்டம் மாவட்ட தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் உரையாற்றும் போது. தலைமைச்செயற்குழு கூட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடு தலை சந்தா சேர்ப்பதன் அவசியம் குறித்து உரை யாற்றினார்  என்றும், மாவட்டத்திற்கு குறைந்தது 100ஆண்டு சந்தாக்களை வழங்கியே ஆக வேண்டும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய பெரி யார் அறக்கட்டளை உறுப் பினர் கே.சி.எழிலரசன் பேசும்போது, தமிழர் தலை வரின் ஆயுளை நீட்டிக்கும் விடுதலை சந்தா திருப்பத் தூர் கழக மாவட்டம் இரு மடங்கு 200 சந்தா வழங்கும் என உணர்ச்சி பூர்வமாக கூறினார்.

உடனே மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ 5 ஆண்டு சந்தா ரூ.9000, மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன் ரூ.1800, மாவட்ட துணைச்செயலாளர் ரூ.1800 என வழங்கினர்.   28.8.2018 செவ்வாய் மாலை வாணியம்பாடி நக ருக்கு கே.சி.எழிலரசன், வி.ஜி.இளங்கோ, அண்ணா சரவணன் ஆகியோர் சென்று, நகர கழக தலைவர் அன்புசேரன், செயலாளர் காசிநாதன், இளைஞரணி பொறுப்பாளர் ஆம்பூர் வெற்றிகொண்டான் ஆகி யோர் இணைந்து  பழைய கழகத் தோழர்கள், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத் தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களை சந் தித்து சந்தா திரட்டப்பட்ட தில் 25 ஆண்டு சந்தாக்கள் பெறப்பட்டது.

சந்தாக்கள் பெற்றதின் மூலம் வாணியம்பாடி கழகம் புத்துயிர் பெற்றது என்பதுதான் உண்மை. அத்தோடு வரும் செப்டம் பர் 17அன்று தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை நகரம் முழுவதும் படம் வைத்து மாலை அணிவிப்பது என்றும் அவரவர் வகிக்கும் கட்சிகளின் சார்பிலும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடுவது என் றும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து 29.8.2018 அன்று மாலை ஆம்பூரில் இதே பணியை மேற் கொள் ளவும் திட்டமிடப்பட்டது, அதனை தொடர்ந்து சோலையார் பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங் காயம், கந்திலி, திருப்பத் தூர், ஊற்றங்கரை, மத்தூர் ஆகிய ஒன்றியங்களிலும் விடுதலை சந்தா சேர்ப்பு, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner