எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, செப்.1 மும்பை திராவிடர் கழகத்தின் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு தாராவி கலைஞர் மாளிகையில் 26.8.2018 அன்று மாலை 7 மணியளவில்  மும்பை திராவிடர் கழகத்தின் தலை வர் பெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்ற, மும்பை திரா விடர் கழகத்தின் செயலாளர் இ.அந் தோணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழ் இலெமூரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், புறநகர் திமுக செயலாளர் அலிஷேக்மீரான், மும்பை மாநகர திமுக சண்முகராசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் அரி ராம்சேட், திமுக தோழர்கள் இராசன், பணகுடி சண்முகவேல், நீதித்துறை திராவிடர் கழகத்தின் தோழர்கள் கண் ணன், இராதாகிருஷ்ணன், ராபின், ஜெ.வில்சன், மு.கணேசன், முன்னாள் திமுக எம்.ஏ.சண்முகம் அவர்களின் புதல்வி பூங்கோதை சந்திரசேகரன், முன்னாள் திராவிடர் கழகத்தின் பொருளாளர் சோமசுந்தரம் அவர்களின் புதல்வர் அண்ணன் ஆசைத்தம்பி, ஜெய்பீம் அறக்கட்டளை தோழர் குட்டி ஆகியோர் கலைஞர் அவர் களுக்கு நினைவேந்தல் உரை நிகழ்த் தினர். இறுதியில் தோழர் இசக்கி பாண்டியன் அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner