எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி,செப். 3 தருமபுரி மாவட்ட விடுதலை சந்தா அளிப்பது தொடர்பாக நடைபெற்ற கலந் துரையாடல் கூட்டம் 28.8.2018 அன்று மாலை 4.30 மணியளவில் தருமபுரி பெரியார் மன்ற அலு வலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கழக அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தலைமையேற்று விடு தலை சந்தா குறித்து தலைமை செயற்குழுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ணத்தை கழகத்தினர் செயல் படுத்துவது தொடர்பாக விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மாவட்ட திராவிடர் கழக தலை வர் இளைய.மாதன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் வீ.சிவாஜி, மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச் செல்வன், மாவட்ட அமைப் பாளர் சி.காமராஜ், மாவட்ட ப.க. செயலாளர் மாரி கருணா நிதி, ஆசிரியரணி மாவட்ட தலைவர் இர.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

150 சந்தா அளிக்க முடிவு

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 150 சந்தாக் களை அளிப்பதென முடிவு செய்து மாவட்ட தலைவர் இளைய மாதன் அறிவித்தார்.

37 சந்தாக்களுக்கு ரூ. 60,300 கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களிடம் வழங் கப்பட்டது. அதன் விவரம் வரு மாறு:

கழக புரவலர் பெரியார் பெருந்தொண்டர் கே.ஆர்.சின்ன ராசு & 25 விடுதலை சந்தாக்கள் & ரூ. 40,500, மண்டல தலைவர் வீ.சிவாஜி & 10 விடுதலை சந்தாக் கள் & ரூ. 16,200, கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் & 1 விடுதலை சந்தா & ரூ. 1,800, கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச் செல்வி & 1 விடுதலை சந்தா & ரூ. 1,800

பாராட்டு

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு கழகத்தின் புரவலர் பெரி யார் பெருந்தொண்டர் கே.ஆர். சின்னராசு அவர்களும் அவரது மகன் சி.ஆசைத்தம்பி ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்களிடம் ரூ. 2 லட்சத்தை வழங்கியதற்காக கழகத்தின் சார்பில் கழக அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் சிறப்பு செய்து பாராட்டினார். அதே போன்று மத்தூர் மாநாட்டை சிறப்பாக தலைமை யேற்று நடத்திய மண்டல இளை ஞரணி தலைவர் வண்டி ஆறு முகம் மற்றும் கழக பொறுப் பாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வி, கோ.திராவிடமணி, இளைய மாதன், தமிழ்ச்செல்வன், சி.காமராசு, கோவிந்தராஜ், இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மண்டல தலைவர் வீ.சிவாஜி கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பங்கேற்றோர்

திராவிட கழக மாநில மாண வர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், கழக நிர்வாகிகள் பெ.கோவிந்தராஜ், காமலாபுரம் இராமசாமி, கைத்தடி இதழ் ஆசிரியர் சி.அறிவழகன், இளை ஞரணி தலைவர் கிருட்டிணன், வகுத்துப்பட்டி கிருட்டிணன், இரு.கிருட்டிணன், சுந்தரம், பெரியார் படிப்பக உதவியாளர் இராமச்சந்திரன், ஜனகராஜ், காரல் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner