எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை , குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் சமுதாய நல், கல்வி அறக்கட்டளை, பாபநாசம், பெரியார் கல்வி, சமூகப்பணி அறக்கட்டளை, கபிஸ்தலம் இமயம் கல்வி, சமூகப்பணி அறக்கட்டளை, இராஜகிரி ஆகியவை இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி

தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை 9.9.2018 ஞாயிறு காலை 9.30 மணிக்கு பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் தங்கள் பள்ளி/ கல்லூரி மாணவர்களைக் கலந்து கொள்ளச்செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர்கள்: நா.காமராஜ் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்), செல்: 9443026451