எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17.9.2018 திங்கள் கிழமை, காலை 8.30 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வடசென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.

காலை 8 மணிக்கு வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் பட்டாளத்தில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

காலை 8 மணிக்கு சென்னை - தியாகராயர் நகரிலுள்ள பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.

காலை 8.30 மணிக்கு சென்னை - அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் மாலை அணிவிப்பர்.

காலை 8 மணிக்கு ஆலந்தூர் நகர மன்றம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தாம்பரம் மாவட்ட கழகத் தினர் மாலை அணிவிப்பர்.

காலை 9 மணிக்கு கழகத் தலைவர் தலைமையில் சென்னை - பெரியார் திட லிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து, அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து கழகத்தினர் மரியாதை செலுத்துவர்.

- தலைமை நிலையம்,

திராவிடர் கழகம்

முக்கிய குறிப்பு: அன்று காலை 10 மணி முதல் பெரியார் திடலில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா நடைபெறுவதால், கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மாலை அணிவித்துவிட்டு, பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிக்குச் சரியாக 9 மணிக்கெல்லாம் வந்து சேரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner