எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேரன்புடையீர்! வணக்கம்.

பெரியார் சமூகக் காப்பணி:

கழக இளைஞரணித் தோழர்கள் அனைவரும் பெரியார் சமூகக் காப்பணியில் பயிற்சி பெறுவது அவசியம் என தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவுறுத்தியிருப்பது தாங்கள் அறிந்ததே. பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் தஞ்சாவூரில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்றிட மாவட்டத்திற்கு 5 தோழர்களை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து அனுப்பிட வேண்டுகிறோம்.

கடைவீதி வசூல் பணி:

மிகமுக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் நமது மாநில மாநாட்டின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகை யில் 10 இளைஞர்களுக்கு குறையாமல் கழக கொடியுடன் சென்று தங்கள் பகுதியில் உள்ள வணிகர்கள், பொது மக்களி டம் துண்டறிக்கையினை அளித்து கடைவீதி வசூல் பணியை உடனே தொடங்கி மாநாட்டு வெற்றிக்கு வலு சேர்த்திட வேண்டுகிறோம்.

கழக இளைஞரணி சீருடை அணிவகுப்பு:

சென்னையில் நடைபெற்ற இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நாம் அழைக்காமலேயே எதிர்பாராதவிதமாக வருகை தந்த நமது தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நமக்கு அளித்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை நடைபெறும் மாபெரும் பேரணியில், கழக இளைஞரணியினர் கழகக் கொடி, சீருடையுடன் மாவட்ட வாரியாக அணிவகுத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடு களையும் கழக மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலோடு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள் கிறோம். நாட்கள் குறைவு, போர்க்கால அடிப்படையில் பணிகளை முன்னெடுப்போம்!

நன்றி!

இவண்

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணி செயலாளர்,

திராவிடர் கழகம்

இரா.ஜெயக்குமார்

பொதுச் செயலாளர்,

திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner