எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருக்குவளை, ஜன. 23 தமிழர் திருநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் திருக்குவ ளைக்கு வருகை தந்தார். அவ ருக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. திருக்குவளையில் திமுக தலைவர் கலைஞர் இல் லத்தினைப் பார்வையிட்டார்.

பின்னர் ஃபீனிக்ஸ் டியூசன் சென்டரில் பயிலும் மாணவர் களிடம் எழுச்சி மிகுந்த உரை யாற்றினார். மாணவர்களின் வடமொழிப் பெயர்களைச் சுட் டிக்காட்டி அவர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டினார். மாண வர்களின் பெயர்கள் பின்வரு மாறு: ஸ்நேகாவிற்கு செம்மொழி எனவும், சக்திசிறீக்கு செல்லக் கிளி எனவும், சண்முகபிரியா விற்கு குறளோணீவியா எனவும், ஜிம்புகேஸ்வரிக்கு புகழினி எனவும், யோகேஸ்வரனுக்கு இசை நிலவன் எனவும், அ ரவிந்தனுக்கு அன்பிற்கினியன் எனவும் தமிழ் பெயர் சூட் டப்பட்டது.

நிகழ்வில் முத்தமிழ் மன்ற தலைவர் குவளை சோ.கணே சன், பொருளாளர் ரவிச்சந்திரன், மண்டல இளைஞரணி செய லாளர் கவியரசன், மாவட்ட மாணவரணி தலைவர் கோளி லிச் செல்வன், ஒன்றிய தலை வர் ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் அவர் களும், அனைத்து தோழர்களும் வெண்மணி தியாகிகள் நினை விடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner