எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உரத்தநாடு, ஜன. 24- 19.1.2017 அன்று மாலை 6 மணியளவில் உரத்த நாடு பெரியார் மாளிகையில், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம், தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங் தலைமையி லும், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகா மணி ஆகியோர் முன்னிலையி லும் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் தொடக்கத் தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட விவசாய அணி தலைவர் மா.இராசப்பா, செயலாளர் பூவை.இராமசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், நகரத் தலை வர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், ஒன்றிய ப.க.தலைவர் கு.நேரு, பூவை.முருகேசன், வன்னிப்பட்டு ரெ. ரஞ்சித்குமார், நகர இளைஞ ரணி செயலாளர் பேபி ரெ. ரமேஷ், வடசேரி கிளை கழக தலைவர் ராமசாமி, மாவட்ட ப.க.செயலாளர் கோபு.பழனி வேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக் குமார், செயலாளர் வே.இராஜ வேல், மாவட்ட இணைச் செய லாளர் தி.வ.ஞானசிகாமணி, மாநில ப.க.துணை தலைவர் வ.இளங்கோவன், மாநில ப.க.பொதுச்செயலாளர் மா. அழகிரிசாமி, ஒன்றிய தலைவர் ஆ.லெட்சுமணன், செயலாளர் இரா.துரைராசு, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தலைமை செயற்குழு உறுப் பினர், இரா.குணசேகரன், மாநில வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.ராமகிருஷ்ணன், காவாரப்பட்டு இராஜகோபால், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை எடுத்து ரைத்தனர். இறுதியில் மாவட் டத் தலைவர் அமர்சிங் அவர் கள் அனைவரின் கருத்துகளை ஏற்று தலைமையுரையாற்றி னார். இறுதியாக இக்கூட்டத் தில் கலந்து கொண்ட அனை வருக்கும் ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்: ஒரத்தநாடு கீழையூர் தங்கராசு, திராவிடர் கழக மாணவ முன்னாள் மாநில செயலாளர் சி.இராஜேந்திரன், நெல்லுப்பட்டு நாகராசு அவர் களின் தந்தையார் சிவஞானம், கக்கரை கோட்டை மதியழகன் அவர்களின் தாயார் தமயந்தி ஆகியோர் மறைவிற்கு இக்கூட் டம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

தீர்மானம் 2: இனவுரிமை மீட்பு ஏடு, உலகின் ஒரே நாத் திக நாளேடு விடுதலைக்கு பழைய சந்தாக்களை புதுப்பித் தும், புதிய சந்தாக்களை சேர்த் தும் 30ஆவது முறையாக உரத்த நாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 2017 பிப்ரவரி 4ஆம் தேதி மதுரையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளிடம் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: 2017 மார்ச் 10ஆம் தேதி அன்னை மணியம் மையார் பிறந்த நாளில், மனு தர்மத்தில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தும் பகுதிகளை கொளுத்துவோம் என திருவா ரூர் மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கி உரத்த நாடு ஒன்றியத்தில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: திராலிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் - தமிழ்செல்வி ஆகியோரின் மகள் பொறியாளர் அமிர்த சுபா - அறிவழகன் ஆகியோரின் மணவிழாவிற்கு 12.2.2017 அன்று தஞ்சாவூர் வருகை தரும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு உரத்தநாடு ஒன்றிய திரா விடர் கழகம் சார்பில் சிறப் பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: 2017 பிப்ரவரி 4ஆம் தேதி மதுரையில் நடை பெறும் கழக பொதுக்குழு மற் றும் திராவிடர் கழக இளைஞ ரணி - மாணவரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவர்களுக்கு ஊர்தி வழங்கும் விழாவிக்கு உரத்தநாடு ஒன்றி யத்திலிருந்து பெருமளவில் தனி வாகனத்தில் சென்று பங்கேற் பது என முடிவு செய்யப்படு கிறது.

தீர்மானம் 6: 2017மார்ச் மாதத்தில் ஒன்றிய, நகர திரா விடர் கழகத்தின் சார்பில் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களை அழைத்து உரத்தநாட்டில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 7: தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் 2017 பிப்ரவரி 12ஆம் தேதி தஞ்சையில், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பங்கேற்கும், நீட் நுழைவுத் தேர்வு, புதிய கல்விக்கொள்கை ஆகியவைகளை எதிர்த்து நடை பெறும் கருத்தரங்கில் உரத்த நாடு ஒன்றியத்தின் சார்பில் பெருமளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner