எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜன. 25- திருச்சி காட்டூர் தி.க. கிளைக் கழகச் செயலாளர் சிவானந்தம் மற் றும் கணேசன், பூபதி, சாரா வள்ளி ஆகியோரின் தாயார் அன்னப்பூரணம் அம்மாள் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி காரைக்குடி கழக மாவட்டம் தேவக்கோட்டை ஒன்றியம், உருவாட்டி கிராமத் தில் ஜன.17 ஆம் தேதி காரைக் குடி மாவட்ட துணைத் தலை வர் கொ.மணிவண்ணன் தலை மையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலா ளர் குணாவதாசன் மற்றும் மக ளிரணி அன்பு செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மறைந்த அன்னப்பூரணம் அம்மாள் படத்தினை எம். வேலு (ஓய்வு, பெல் நிறுவ னம்), தி.க. தலைமைக்கழக பேச்சாளர் இராம.அன்பழகன் நினைவேந்தல் உரையாற்றினர்.

இதில் திருச்சி மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் இரா.திராவிடன்கார்த் திக், கார்த்திக், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், காட்டூர் கிளைக்கழக தலைவர் காமராஜ், பொருளாளர் கனக ராஜ், துணைத் தலைவர் சங் கிலிமுத்து, துணை செயலாளர் இராஜேந்திரன், அமைப்பாளர் கல்பாக்கம் இராமச்சந்திரன், துவாக்குடி நகர தலைவர் விடு தலை கிருட்டிணன், எழுத்தா ளர்கள் வி..சி.வில்வம், வைகறை மற்றும் ஊர் பெரியவர் அப்துல் ரகுமான், உறவினர்கள் ஜெய ராமன், நாகலிங்கம், சுந்தரம், கனகராஜ், சவுந்திரராஜன், நவ நீதி கிருஷ்ணன், பிரபாகரன், அருண் கருணாகரன், காவியா, தீபா, இந்திரா, நிர்மலா, மரக தம், தமிழ்ச்செல்வம், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக காட்டூர் கிளைக்கழக செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner