எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊற்றங்கரை, மார்ச் 30- ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட் டத்தின் 75ஆம் மாத நிகழ்வாக ஊற்றங்கரை பேலியோ கட் செவி குழுவுடன் இணைந்து பேலியோ (ஆதிமனிதன் உணவு முறை)விழிப்புணர்வு கருத்த ரங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5.3.2017 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது

அறிவாசான் தந்தை பெரி யார்  அவர்கள்   3.2.1964 அன் றைய விடுதலையில்   நாம் சக்தி குறைந்தவர்களாகவும், மனஉறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசிஉணவு தான், அரிசி மனிதனை சாகா மல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது, அதில் சத்து இருக் காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது, அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக்கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறிய படி அண்மைக்காலமாக தமிழ்நாட் டில் வளர்த்து வரும் உணவு முறை தான் பேலியோ (ஆதி மனிதன் உணவு முறை) விடு தலை வாசகர் வட்டத்தின் மருத்துவ அறிவியல் சார்ந்த மாத நிகழ்வாக  பேலியோ (ஆதிமனிதன் உணவு முறை) விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக காலை 9 மணியளவில் தமிழர் களுக்கு பேலியோ உணவு முறையை அறிமுகப்படுத்திய ஆரோக்கியம்  நலவாழ்வு முக நூல் குழுவின் தலைவரும் அமெரிக்க வாழ் தமிழருமான   நியாண்டர் செல்வன் அவர்கள் திருப்பூர்  பேலியோ கூட்டத்தில்   ஆற்றிய உரையின் காணொலி ஒளிபரப்பப்பட்டது. இந் நிகழ் விற்கு ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப் பாசாமி அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார்.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு விழா குறித்தும் தமது பேலியோ அனுபவங்கள் குறித் தும் விழா அறிமுக உரையாற் றினார்.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவரும் பேலியோ கட்செவி குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தணிகை ஜி.கருணாநிதி அவர் கள் விழாவிற்கு தலைமை வகித்து தமது பேலியோ அனு பவங்களை பகிர்ந்து கொண் டார். இந்நிகழ்விற்கு  ஏஆர்எஸ் பெட்ரோலியம் ஏஜென்சீஸ்  உரிமையாளர்    இராஜி அவர்க ளும், அரிமா சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நா.பா. செந்தில்குமார் அவர்களும், திருமகள் அக்ரோ   நிறுவன பொறுப்பாளர்  சிவா அவர்க ளும் முன்னிலை வகித்து உணவு முறை குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தமிழர்களுக்கு பேலியோ உணவு முறையை அறிமுகப் படுத்திய ஆரோக்கியம்  நல வாழ்வு முகநூல் குழுவின் தலைவரும்  அமெரிக்க வாழ் தமிழருமான   நியாண்டர் செல் வன் அவர்கள் விழாவினை வாழ்த்தி அமெரிக்காவில் இருந்து அனுப்பிய காணொலி ஒளிபரப்பப்பட்டது. உணவு முறை தொடங்குவதற்கு முன்பு எடுக்க வேண்டிய இரத்த பரி சோதனைகள் குறித்து தைரோ கேர் நிறுவனத்தின் சார்பில் ரூபேஷ் குமார் அவர்கள் விளக் கினார்.

பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை) குறித்த தமது அனுபவங்களையும், இம் உணவுமுறை தந்தை பெரியார் அவர்கள் கூறிய வாழ்விய லோடு எவ்வாறு பொருந்துகி றது என்பதையும் மேட்டூர் தோழர் முல்லைவேந்தன் விளக்கி தமது அனுபவ உரையை சுவைபட பகிர்ந்து கொண்டார்.

ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுமத்தின் தன்னார் வலர்களில் ஒருவரும் சீரிய பெரியாரிய செயல்பாட்டாள ருமான வி.சி.வில்வம் அவர் கள் பேலியோ உணவு முறை குறித்தும், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் இவ் உணவு முறையால் தீர்க்கப் படுகிறது என்பதையும் பவர் பாயின்ட் மூலம் வெகு சிறப் பாக விளக்கி கருத்துரையாற் றினார். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்களை அளித்து சிறப்பு செய்யப்பட்டது.

நிறைவாக பெரியார் மருத் துவ குழுவின் மாநில செயல ரும், விழுப்புரம் அரசு மருத்து வக்கல்லூரியின் இணை பேரா சிரியருமான மருத்துவர் பழ. ஜெகன்பாபு அவர்கள் பொது மக்களின் பேலியோ தொடர் பான பல்வேறு சந்தேகங்க ளுக்கு மருத்துவ அறிவியல் ரீதியாக விளக்கமளித்தார்.

விழாவினை விடுதலை வாசகர் வட்ட துணை செயல ரும் தலைமை ஆசிரியருமான சித.வீரமணி அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார் விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் செ.சிவ ராஜ் அவர்களின் நன்றியுரை யுடன் விழா நிறைவுபெற்றது.

விழாவில் பங்கேற்ற அனை வருக்கும் கொய்யா காய், பேலியோ பரிந்துரைக்கும் உணவுகளில் ஒன்றான முட் டையும் மதிய உணவாக வழங் கப்பட்டது. இது போன்ற மருத் துவம் சார்ந்த நிகழ்வுகளை விடு தலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென கலந்து கொண்ட பலரும் வேண்டு கோள் விடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner