எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆவடி, மார்ச் 30- சென்னை மண் டலத் தலைவர் இரத்தினசாமி அவர்களின் தலைமையில் மனுதர்மத்தை எரித்து சிறை சென்ற, பரப்புரை பயணம் செய்த ஆவடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு சிறப்பு செய்து பாராட்டப்பட்டனர்.

26.3.2017 ஞாயிறு அன்று காலையில் 10 மணியளவில் ஆவடி மாவட்டம் கோயில் பதாகையில் உள்ள கழகத் தோழர் மொழியன்பன் இல்லத் தில் மாவட்டக் கலந்துரையா டல் கூட்டம் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன் அடிப் படையில் இணையர் தேன் மொழி, மகன் தமிழமுதன் ஆகி யோர் அவருடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந் தனர்.

கூட்டத்திற்கு சென்னை மண்டலத் தலைவர் இரா.இரத்தினசாமி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். முன் னதாக மாவட்டத் தலைவர் தென்னரசு அனைவரையும் வரவேற்று நிகழ்வின் நோக்கம் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாவட்டத் துணைத் தலைவர் ஏழுமலை, செயலா ளர் சிவகுமார், அமைப்பாளர் உடுமலை வடிவேல், நகர கழக செயலாளர் கோ.முருகன், இளைஞரணித் தலைவர் கார் வேந்தன் ஆகியோர் மாவட்ட அளவில் தொடர்ந்து செய்ய வேண்டிய பிரச்சாரம் குறித்தும் மொழியன்பனின் கொள்கையு றுதி, பணிகள் பற்றியும் பாராட் டிப் பேசினர். தொடர்ந்து செந் துரை இராசேந்திரன் அவர்கள், ஆவடி பெரியார் மாளிகையின் வளர்ச்சிப் பணிகளையும் குறிப் பிட்டுப் பேசினார். இறுதியில் மொழியன்பன் தனது வீட்டில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்த தற்கு மாவட்டக் கழகத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றி னார். தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி மனு(அ)தர்மம் நூலைக் கொளுத்தி சிறை சென்ற மக ளிர் தோழர்களுக்கும், 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையிலும் பரப்புரைப் பய ணம் சென்று வந்த ஆவடி மாவட்டத் தோழர்களுக்கும் சென்னை மண்டலத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கலந்துரையாடலின் முடிவில் மொழியன்பன் அவர் களின் மகன் தமிழமுதன் ஆவடி பகுத்தறிவாளர் கழகத்திற்கான மாவட்ட அமைப்பாளராக அறி விக்கப்பட்டார்.

நிகழ்வில் தோழர்கள் மாவட்ட மகளிர் அணித்தலை வர் ராணி, ஜெயந்தி, சிவசுந்தரி, அறிவுமணி, சோபன்பாபு, நடராசன், முத்துக்கிருஷ்ணன், இணைஞரணி செயலாளர் கண்ணன், சித்தார்த்தன், அருள் தாஸ், பழ.முத்துக்குமார், வை. கலையரசன், இளவரசு, பட் டாளம் பன்னீர், ரகுபதி, ராம துரை, மேனாள் மாவட்ட செய லாளர் இல.குப்புராசு, ஒளிப் படக் கலைஞர் கனகசபை, அருள், தமிழ்செல்வன் மற்றும் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப்பாசறையின் ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner