எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

எடுத்தவாய்நத்தம், மார்ச் 31 கல்லக்குறிச்சியை அடுத் துள்ள எடுத்தவாய்நத்தம் கிரா மத்தில் மாவட்ட அமைப்பாளர்  த.பெரியசாமி  மகனும் மாவட்ட ப.க. தலைவருமான  பெ.எழிலரசன்  எழில்-புகழ் இல்ல திறப்பு விழா 26-.02.-2017ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட தி.க.செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார்.  பெ.எழிலரசன், வர வேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ம.சுப்பராயன் தொடக்க உரை யாற்றினார். ஓவிய இமயம்-முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மு.கலைச்செழியன், ச.சுந்தரராசன் கல்லை நகர தி.க. தலைவர்,  பெ.கோவிந்த ராஜ் முன்னாள் ஊ.ம.தலைவர்,  அர.கவுதமன் (எ) ராஜா ம.தி. மு.க.,  ந.இராமசாமி நவீன அரிசி ஆலை உரிமையாளர்,  அர.பாண் டியன் அ.தி.மு.க,  மு.ரங்கசாமி எடுத்தவாய்நத்தம் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் இல்லத்தை திறந்துவைத்து எழுச்சியுரை யாற்றினார். அவர் தமது உரை யில். மாவட்ட தி.க.அமைப் பாளர் த.பெரியசாமி 60 ஆண்டு காலமாக பெரியாரின் கொள் கைகளை பின்பற்றி வருகிறவர்.  சிறிதளவும் கோபப்பட மாட்டார். ஆசிரியராக பணி யேற்று சிறப்பான பணிகளை செய்து, தலைமையாசிரியராக உயர்ந்து பலரை திராவிடர் கழகத்தின் பால் ஈர்த்தவர். தன்னுடைய பிள்ளைகளை இயக்க உணர்வுள்ளவர்களாக  வளர்த்தார். அதன் பயனாக இன்று அவர் மகன் எழிலரசன் தலைமையாசிரியராக பணி புரிந்து வருகிறார். இயக்கத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக சிறப்பான பணிகளை செய்து வருகிறார். இன்று எழிலரசனின் வாழ்வி ணையர் புகழேந்தியும்  ஆசிரி யராக விளங்குகிறார். இரு வரும் கல்வராயன்மலைக்கு அருகில் இயற்கையான சூழ லில் இந்த இல்லத்தை கட்டி யுள்ளனர். வாழ்வில் இன்ப துன்பங்களில் சமபங்குள்ள வாழ்விணையர்களாக விளங்க வேண்டும் என்பதின் அடிப் படையில் எழில்-புகழ் இல்லம் எனப் பெயரிட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஆசைத்தம்பி, ராகுலன் என்ற இரு புதல்வர்கள் உள்ளார்கள். இவர்களும் தாய், தந்தையர்களின் வழியில் பயணிப்பார்கள். சமுதாயத்தில் உயரிய நிலைமை அடை வார்கள். ஏன் இப்படிச் சொல் கிறேன், என்றால் தந்தைப் பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள் சிக்கனமாக இருப்பார்கள்; வீண் ஆடம்பரச் செலவு செய்யமாட்டார்கள்; காரண காரியத்தை அறிந்து செயல்படுவார்கள்; பண்டிகை விழாக்கள்; இவைகட்கு செலவு செய்ய மாட்டார்கள். இத் தகைய காரணங்களால் தான் எழிலரசனும் புகழேந் தியும் வளமான வாழ்வை வாழ் வார்கள் எனச் சொல்லுகிறேன்.

எழிலரசனும் புகழேந்தியும் இந்த இல்லத்திறப்பு விழாவை ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்து இன்று விழுப்புரம் மண்டல திராவிடர் கழகமே இங்கு கூடியுள்ளது,  என்று சொல்வ தற்கேற்ப அனைத்துப் பொறுப்பாளர்களும் வந்துள் ளார்கள். அத்தோடு ஏராளமான ஆசிரியர்களும், உறவினர் களும், நண்பர்களும், வந்துள் ளார்கள் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் திராவிடர் கழக கொள்கைகளை பேசுவது மிக்கப்பயனுள்ளதாகும். இதே விழா ஆத்திகர் வீட்டில் நடைபெறுமானால். பார்ப் பான் நமக்கு புரியாத சமஸ் கிருதத்தில் மந்திரம் என்ற பெயரில் ஓதுவான். யாகம் என்ற பெயரில் நெய் ஊற்றி தீ வளர்ப்பான். கூடியிருக்கும் உறவினர்கள், நண்பர்கள் எல் லாரையும் புகையை சுவாசிக்கச் செய்து இருமலையும், கண் எரிச்சலையும் உண்டுபண்ணு வான். பஞ்ச கோமியம் என்ற பெயரில் பசுவின் பால், சாணம், மூத்திரம், மோர், நெய் இவற்றை கலக்கி நமக்கு கொடுத்து உறிஞ்சச் சொல்வான். இவ்வளவு கேடுகளையும் நாம் பெற்றுக் கொண்டு, பார்ப்பா னுக்கு அரிசி, காய்கள், வஸ் திரம், தட்சணை என்றெல்லாம் கொடுக்க வேண்டும். இன்னும் கோமாதாவை வீட்டில் நுழை யச் செய்யவும் அதை சாணம் போடவும், மூத்திரம் பெய்ய வும் அதனை இம்சை செய் வார்கள். எவ்வளவு அநாகரிக மான செயல்! இந்தச் சடங்கு களெல்லாம் செய்யாமல், அறி வார்ந்த முறையில் இவ் விழாவை நடத்தியுள்ள எழில் புகழ் குடும்பத்தாரையும் அவர் களின் உறவினர்களையும் மன தார வாழ்த்துகிறேன். வாழ்க பெரியார் எனக் கூறி தனது உரையை முடித்தார்.

முன்னதாக விழுப்புரம் மண்டலத் தலைவர்  க.மு.தாஸ் தந்தை பெரியாரின் உருவப் படத்தையும்,   தி.மு.க. க.நடராசன் அறிஞர் அண்ணா உருவப்படத்தையும்,   கல்லக் குறிச்சி பகுத்தறிவு மன்றத் தலைவர் பெ.செயராமன் அய் யன் திருவள்ளுவர் உருவப் படத்தையும்,  பழனியம்மாள் கூத்தன் அன்னை மணியம்மை யார் உருவப்படத்தையும், மு.கண்ணன் விழுப்புரம் மண்டல செயலாளர், காமராசர் உருவப்படத்தையும் இலட்சுமி பதி, சங்கராபுரம் நகர ப.க.தலைவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவப்படத்தை யும், பொதுக்குழு உறுப்பினர் க.மு.தா. விஜயலட்சுமி அன்னை நாகம்மையார் உருவப் படத்தையும், திராவிடர் கழக பொருளாளர்  கோ.சாமிதுரை அவர்களின் உருவப்படத்தை  இரா.முத்துசாமி -- கல்லை நகர தி.க. செயலாளர் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில்   மாநில மருத்துவரணி  செயலாளர்  கோ.சா.குமார், விழுப்புரம் மாவட்ட தலைவர்  ப.சுப்ப ராயன், மாவட்ட செயலாளர் சே.வ. கோபண்ணா, கல்லக் குறிச்சி மாவட்ட ப.க. செய லாளர்  செ. இராதாகிருட்டிணன், மாவட்ட ப.க. அமைப்பாளர் சி.முருகன், தலைமையாசிரியர் வீரபாண்டியன், தலைமையா சிரியர்  ஜெகதீசன் ஜெய லட்சுமி கண்ணாயிரம், வடசிறு வள்ளுர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்,  அண்ணா அறிவுமணி, அரிமா தீனதயாளன், ஓவியர் செல்வ ராசன், மேல்நாரியப்பனூர் ராமு மாவட்ட துணைச் செய லாளர் கல்லக்குறிச்சி குழ. செல்வராசு, மாவட்ட துணைச் செயலாளர் உளுந்தூர்பேட்டை முத்து, உளுந்தூர்பேட்டை ஒன்றிய தி.க. தலைவர் செல்வ சக்திவேல், ஒன்றிய தி.க.செய லாளர் சேந்தநாடு அரங்க பரணிதரன், ஒன்றிய தி.க அமைப்பாளர் வண்டிப்பாளை யம் ராவணன், உளுந்தூர் பேட்டை ஒன்றிய ப.க.தலைவர் அரங்க. செல்லமுத்து, பொதுக் குழு உறுப்பினர் திருக்கோவி லூர் தி.பாலன். ஒன்றிய தி.க.தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், முகையூர் ஒன்றிய தி.க தலைவர் சென்னகுணம் சித்தார்த்தன், வடலூர் முத்து குமார், சங்கராபுரம் ஒன்றிய தி.க.தலைவர் பெ.பாலசண் முகம். ஒன்றிய தி.க.செயலாளர் கே.மதியழகன் கல்லக்குறிச்சி ஒன்றிய தி.க. பொருளாளர் நல.இராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ.கரிகாலன்,  தி.கோ.நரசிம் மன், சங்கராபுரம் நகர ப.க. செயலாளர் இரா.நாராயணன்,  பட்டதாரி ஆசிரியர், பெ.கவுதமன் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி,  ஆசிரியை மேரி ஆனி ஃபிரிட்டா  உட்பட  ஏராளமா னோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் நகர தி.க. தலைவர் இல.சேரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அனை வருக்கும் அருமையான மதிய உணவு வழங்கப்பட்டது. இறு தியில் மாவட்ட தி.க. அமைப் பாளர் த.பெரியசாமி நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner