எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, ஏப். 4- மயிலாடு துறை கழக மாவட்டம் சீர்காழி ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 30.3.2017 அன்று மாலை 5 மணியளவில் கடவாசல் கழ கத்தோழர் ச.சந்திரன் இல்லத் தில் மாவட்ட தலைவர் எஸ். எம்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் நா.சாமிநாதன், ஒன்றிய தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டு ரெங்கன், கடவாசல் கிளைக் கழக தலைவர் சா.ப.செல்வம், கடவாசல் மகளிரணி தலைவர் ச.சாந்தி, செயலாளர் பி.குண மதி, தோழியர் தமிழ்மணி, கட வாசல் ஊராட்சி மன்ற திமுக செயலாளர் ஜெ.அறிவழகன், கடவாசல் தோழர்கள் சந்திர சேகரன், மகாலிங்கம், டி.நாக ராஜன், பி.செல்வகுமார், டி. குபேந்திரன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர். கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: கடந்த 24.5.2016 அன்று நடைபெற்ற ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டத் தீர்மானத்தின்படி கடவாசலில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கான செயல்பாடு களை துரிதப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2: கடவாசலில் நிறுவப்படவுள்ள தந்தை பெரி யார் முழு உருவ சிலையை தனது சொந்த செலவில் அன் பளிப்பாக அளிக்க முன் வந் துள்ள கடவாசல் ஜெ.அருட் செல்வன் அவர்களுக்கு இக் கூட்டம் உளமார்ந்த நன்றியை யும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் 3: தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச் சிகள், கடவுள் மறுப்பு விளக்க தீ மிதித்தல், அலகுகுத்துதல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற நிகழ்ச்சிகளோடு மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தை நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைக் கொண்டு சிலையை  திறப்பது, பல்வேறு சமூகநீதித் தலைவர்களை அழைத்து மாநாடு போன்று நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner