எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஏப். 11- 8.4.2017, சனிக் கிழமை, மாலை 5 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 52ஆவது நிகழ்ச் சியாக “யாமிருக்க பயமேன்?” என்ற குறும்படம் ஓட்டல் ஜான்ஸ் (மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில்) வெளியிடப்பட்டது.

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் பணி நிறைவுபெற்ற நீதிபதியுமான பொ.நடராசன் ஏற்கெனவே பெரியார் நூற்றாண்டை யொட்டி நடந்த சிறுகதை போட்டியில் அவர் எழுதி மூன்றாம் பரிசு பெற்று 1.11.1978இல் “உண்மை” இத ழில் வெளியான சிறுகதையின் திரைவடிவம் தான் “யாமி ருக்க பயமேன்?” என்ற குறும் படம். வெளியீட்டு விழா விற்கு வந்திருந்தோரை விடு தலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் ச. பாலராசு  உதவி கல்வி அலுவலர், (பணி நிறைவு) வரவேற்று பேசினார். டாக்டர். கு. கண் ணன் (அகச்சுரப்பியல் நிபு ணர்) குறும்படத்தை வெளியிட மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர், முனைவர். வா.நேரு பெற்றுக்கொண்டார். பின்னர் குறும்படம் வெளியிடப்பட்டது. அதனை பாராட்டி டாக்டர். ஆர். சுந்தரராசன் எம்.டி.டி.ஓ., கனகராம், மத்திய அரசு செயலாளர் (பணி  நிறைவு), டாக்டர். அ. சின்னத்துரை, எலும்பு முறிவு சிகிச்சை நிபு ணர், முனைவர். ராம பாண்டு ரங்கன், முதன்மை கல்வி அலுவலர் (பணி நிறைவு), துரை எழில் விழியன் ஆகி யோர் குறும்படத்தின் சிறப்பை பற்றி உரையாற்றினார்கள்.

குறும்படத்தில் நடித்த பனகல் பொன்னையா, வழக் குரைஞர் இளங்கோ, வழக்கு ரைஞர் தியாகராசன், சடகோ பன், வேம்பன், அகிலாகுமாரி, இனியா, இதயா, பாண்டி மீனா, மற்றும் தீபா ஆகி யோருக்கு பயனாடை அணி வித்து பாராட்டு செய்யப் பட்டது. குறும்படத்திற்காக பணியாற்றிய டாக்டர் கதி ரேசன், ஒளிப்பதிவாளர் நாகேந் திரன் மற்றும் காளிதாஸ் ஆகி யோருக்கு பயனாடை அணி வித்து பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நிகழ்ச்சியினை மதுரை மண்டல திராவிடர் கழக செயலாளர், மா. பவுன் ராசா தொகுத்து வழங்கினார். விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பொ. நடராசன் ஏற்புரை வழங்க விடுதலை வாசகர் வட்ட செயலாளர் அ. முருகானந்தம்  நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. குறும்படத்தின் தாக்கம் நடு நிலையாளர்களுக்கும் மன நிறைவை தந்ததோடு அவர் களது பாராட்டையும் பெற் றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner