எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாகர்கோவில், ஏப். 26- குமரி மாவட்ட கழக இளை ஞரணி மாணவரணி கலந்துரை யாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந் தது.

மண்டல இளைஞரணி செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றி னார். பகுத்தறிவாளர்  கழக மாவட்ட செயலாளர் நாஞ்சில் எம்.பெரியார்தாஸ் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சேகர் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஸ்வரி, மாவட்ட அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

இளைஞரணி அமைப்பு பணிகள், செயல் திட்டங்கள் குறித்து மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கருத்துரை ஆற்றினார்.

தக்கலை ஒன்றிய தலைவர் இரா.ராஜீவ்லால், ஒன்றிய ப.க.செயலாளர் செ.செல்வன், கழக தோழர்கள் இரா.லிங்கேசன், சியாமளா, டெனி போஸ், சுகுமாறன், அன்பரசி, பெரியார் பிஞ்சுகள் பிருந்தா, அபர்ணா, முகிலன், உதயா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செய லாளர் பச்சைமால் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) மார்ச் 5 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்ட தீர்மா னங்களை முழுமையாக செயல் படுத்துவது என இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

2) தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் எழு திய வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுக விழாவினை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3) மாவட்ட இளைஞரணி, மாணவரணி சார்பில் மாவட் டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

4) ஜூலை 6,7,8,9 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் நடக் கும் பெரியாரியல் பயிற்சி முகா மிற்கு அதிகமான மாணவர் களை பங்கேற்க வைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட இளைஞரணி தலைவர் த.சுரேஷ், செயலாளர் தா.பச்சைமால், அமைப்பாளர் மு.சேகர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner