எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஏப். 26- தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் வேப்பிலைப்பட்டியில் தந்தை பெரியார் (138) அண்ணல் அம் பேத்கர் (127) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (84) ஆண்டு பிறந்த நாள் விழாவும், மனுதர்ம எரிப்பு போராட்டத் தில் கைதான, நீட் நுழைவு தேர்வை எதிர்த்து பரப்புரை பயணம் செய்த தோழர்களுக்கு பாராட்டு விழா 15.4.2017 அன்று மாலை 6 மணியளவில் வேப்பிலைப்பட்டியில் மாண வர் கழகம் சார்பில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில திரா விடர் மாணவரணி துணை செயலாளர் த.யாழ்திலீபன் தலைமையில் ஒன்றிய மாண வரணி தலைவர் இ.சமரசம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் சி.காமராஜ், மாவட்ட அமைப் பாளர் இ.மாதவன், மாவட்ட துணைத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம், மண்டல செயலாளர் கரு.பாலன், ப.க.செய லாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் பெ.கோவிந்தராஜ், ஆசிரியரணி செயலாளர் தீ.சிவாஜி, மகளிர் பாசறை தலைவர் மு.சாந்தி, மாணவரணி தலைவர் முனி யப்பன், ஒன்றிய தலைவர் பெ.சிவலிங்கம், திமுக சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர் அ.தமிழரசன், அதிமுக சார்பில் ஊராட்சி செயலாளர் சி.ஆசை தம்பி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மு.குமரன், ஊர் தலைவர் அ.செட்டதுரை, ஊர் துணைத் தலைவர் கே.வேணு கோபால் ஆகியோர் முன்னி லையேற்று முன்னுரை வழங் கினர்.

புரட்சியாளர் சிலைகளுக்கு மாலை

நிகழ்வின் முன்னதாக பள்ளியின் முன்னதாக நிறுவப் பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் சா.இராசேந்திரன் அவர்களும், அண்ணல் அம் பேத்கர் சிலைக்கு மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் முனைவர் மு.இராசேந்திரன் ஆகியோர் கழக தோழர்களும், ஊர்பொதுமக்களும் இணைந்து முழக்கமிட மாலை அணிவித்தனர்.

படத்திறப்பு

மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர் களின் படத்தை சமூக ஆர்வ லர்கள் திறந்து வைத்து கருத் துரை வழங்கினார். கவுதம புத்தரின் படத்தை பில்பருத்தி பி.எஸ்.நாகன், திருவள்ளுவர் படத்தை ஆசிரியர் தீ.முனு சாமி, தந்தை பெரியார் படத்தை ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கே.கனகரத்தினம், அண்ணல் அம்பேத்கர் முனைவர் மு.இரா சேந்திரன் கல்வி வள்ளல் சி.காமராசர் படத்தை கடத்தூர் திமுக பொறுப்பாளர் கே.மணி, அறிஞர் அண்ணாவின் படத்தை சிந்தல்பாடி முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன், அன்னை நாகம் மையார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் சி.வடிவேல், அன்னை நாகம்மையார் படத்தை பெரியார் பிஞ்சு க.காவியா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்தை அரூர் சா.இராசேந் திரன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படத்தை ஈரோடு மய்ய நூலகர் எம்.கோபால கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கடத் தூர் இரா.அரங்கநாதன், சுய மரியாதை சுடரொளிகள் படத்தை தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரும் பலத்த கையொலி களுக்கிடையே திறந்து வைத்து உரையாற்றினர்.

கருத்துரை

மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாநில ப.க.செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை ஜெயராமன் தொடக்கவுரையாற்றினார்.

சிறப்புரை

இறுதியாக தலைமை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்  தந்தை பெரியார், அண்ணா உரையில் அம்பேத்கரை ஒப்பிட்டும் அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும் இன்றைக்கு பிஜேபி அரசு மக்களுக்கு செய்யும் கேடுகள் குறித்தும், தந்தை பெரியார் அம்பேத்கர் கொள் கைகள், இலட்சியங்களை உலகெங்கும் கொண்டு செல் பவர் திராவிடர் கழக தலைவர் அய்யா வீரமணி அவர்களே என்பது குறித்து சிறப்புரையாற் றினார்.

பாராட்டு

சிறப்புரைக்கு முன்னதாக மனுதர்ம எரிப்பு போராட்டத் தில் பங்குபெற்று கைதான தோழியர்களுக்கும், நீட் நுழைவு தேர்வை எதிர்த்து பரப்புரை பயணம் செய்த த.யாழ்திலீபன் தலைமையிலான கழக மாணவரணி தோழர்களுக் கும் சிறப்பு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் மத்தூர் அரங்க இரவி, ஊற்றங்கரை சித. அருள், இரு.கிருட்டிணன், வண்டி ஆறுமுகம், சிவராஜ், வே.தனசேகரன், மதிமுக தி.சிவசங்கரன், பெ.கண்ணன், வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், மு.சிசுபாலன், ந.விஜய், இரா.மாதேஸ்வரன், மா.சேட்டு, நவலை மா.கவி நிலவன், தாளநத்தம் பாண்டி யன், நடராஜ், மூ.கணேசன், தீ.அமுல்செல்வம், சி.ஆதிசிவம், கொ.கண்ணப்பன், எம்.சின்னமூக்கன், சு.தமிழரசு, த.முருகம்மாள், சுசிலா, கலா, த.சுடரொளி, சத்ரபதி, காம லாபுரம் தோழர்கள் கு.சரவ ணன், இராமசாமி, மாணிக் கம், அருண்சோரி, பாப்பாரப் பட்டி வினோபாஜ், ஆசிரியர் சுந்தரம், அருணாசலம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கழககொடி தோரணங் களும், வண்ண வண்ண விளக் குகளும் தெருவெங்கும் காட்சி யளித்தன.

வருகை தந்த அனை வருக்கும் இரவு சிறப்பு உணவு விருந்தளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்செல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார். இறுதியில் ஒன்றிய மாணவ ரணி தலைவர் வாசிகவுண்டனூர் அ.பூவரசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner