எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குந்தவை நீச்சல் குளத்தில் கும்மாளமிட்ட பெரியார் பிஞ்சுகள்!

பழகுமுகாமின் அலையலையான நிகழ்ச்சிகளில் நீச்சல் பயிற்சி!

தஞ்சை. ஏப், 30- சென்ற ஆண்டு வரை யிலும் நீச்சல் குளம் என்பது பொழுது போக்குக்கான ஒரு சுற்றுலாவாகத்தான் இருந்தது. அதுவும் ஒருநாள்தான். அந்த பொழுது போக்கிலும்கூட பயன்பாடு இருக்கவேண்டுமென்று, அதையே அய்ந்து நாள்களும் பெரியார் பிஞ்சுகளுக்கு, நீச்சல் பயிற்சியாகவே தரப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தஞ்சை மருத்துவ கல்லூரி நெடுஞ்சாலையில் உள்ள கணபதி நகரில் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் உள்ள “குந்தவை நீச்சல் குளத்தில்’’ முறையாக அனுமதி பெறப் பட்டு, பெரியார் பிஞ்சுகள் குழாம் சுற் றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். சென்ற ஆண்டுவரை சென்றுவந்த “சிவ கங்கை பூங்கா’’விலுள்ள நீச்சல் குளம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒருமணி நேரத்தில் பிஞ்சுகளின் ஏகபோக உரி மையாகயிருக்கும். அவர்களை வெளி யில் வரச்செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இங்கே வழக்கமான ஒருங்கி ணைப்பாளர்களுடன் நீச்சல் குளத்தின் பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டு அவர்களை கட்டுப்படுத்துவார்கள். ஆனாலும் என்ன, தண்ணீர் அல்லவா! அதுவும் பளிங்கு போல நீர்! நீலவண் ணத்தில் சிறுசிறு அலைகளினூடே கதிர வனைப் பிரதிபலிக்கும் பளபளப்பு! தரையில் பதிக்கப்பட்டிருக்கும் பளிங் குக்கற்களும் நேரில் பார்த்தது போல மினுமினுக்கிறது! பார்த்தாலே இறங்கி விளையாட வேண்டும் என்கிற துறு துறுப்பு ஏற்படுவதை தவிர்க்கவே முடி யாது.

அய்ந்து நாள்களும்

நீச்சல் பயிற்சி!

அப்படிப்பட்ட நீச்சல் குளத்திற்கு உடற்பயிற்சித் துறை இயக்குநர் ரமேஷ் வழிகாட்டுதலில் ஒருங்கிணைப்பாளர் களின் துணையோடு இரண்டு பிரிவு களாக நாள்தோறும் பெரியார் பிஞ்சுகள் அழைத்துச் செல்லப்பட்டனர். நீச்சல் குளத்தின் அருகில் சென்றவுடனேயே பிஞ்சுகளைப் பொறுத்தவரை தொபுக் கடீர் என்று குதித்துவிடுவார்கள். இங்கு நிலைமையே வேறு. முதலில் ஒரு செயற்கை சிற்றருவியில் (ஷவரில்) நிற்கவைத்து குளிக்க வைக்கிறார்கள். பிறகு வரிசையாக அழைத்து வரப்படு கிறார்கள். தண்ணீரில் இறங்குவதற்கு முன்பு பிஞ்சுகள் வியந்து போகும்படி யான ஒரு காட்சி நடந்தேறியது. ஆம்! பயிற்சியாளர்கள் பார்த்துக்கொண் டிருக்க, டால்ஃபின் மீன்கள் டைவ் அடிக்கும் பாருங்கள், அதைப்போல மேலேயிருந்து சொய்ங்... என்று டைவ் அடித்து தண்ணீருக்குள்ளேயே நீண்ட தூரம் நீந்திச்சென்று குறிப்பிட்ட இடங் களில் நின்று கொண்டு, பிஞ்சுகளை உள்ளே வரிசையாக வரவழைத்தனர். பிஞ்சுகளுக்கு அவர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டுப்போனது. உள்ளே இறங்கியபிறகு சுவற்றோரம் உள்ள கைப்பிடியைப் பிடித்தபடி நீரில் மூழ்கி கால்களை உதைத்து அடித்துப் பழகுதல்! மூழ்கிப்பழகுதல்! கைகளை துளாவிப்பழகுதல்! தண்ணீருக்குள் கைகால்களை அசைக்காமல் மிதத்தல்! என்று ஆழம் குறைவான பகுதிகளி லேயே பயிற்சி கொடுக்கின்றனர். பிஞ் சுகள் எல்லை தாண்டி போய்விடாவண் ணம் பயிற்சியாளர்கள் எல்லை கட்டி நின்றனர். பலரும் ஓரளவு சிறப்பாகச் செய்தனர். இரண்டு மூன்று நாள் பயிற் சிக்குப்பிறகு, மாணவர்கள் பலரும் தன்னம்பிக்கைப் பெற்று சிறிது தூரம் நீச்சல் அடிக்கவும் கற்றுக்கொண்டனர்.

பிஞ்சுகளின் இனிமையான இயல்பு!

தங்களுக்கு ஓரளவுக்கு நீச்சல் கைவந்துவிட்டது என்றவுடன் அவர் களது முகத்தைப் பார்க்க வேண்டுமே! அடேயப்பா! அந்த முகவெளிப்பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிடுவது என் பது கடினம்தான். இந்த அய்ந்து நாட் கள் பயிற்சிகள் போதாதென்றாலும் நீச் சலை முழுமையாகக் கற்றுக்கொள்ளும் உந்துதலை இது நிச்சயம் கொடுத்து விடும். இது அவர்களின் எதிர்காலத்தில்  உரிய நேரத்தில் பயன்படும் என்பது நிச்சயம். ¢பயிற்சி தருகின்றவர்களுக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, மாண வர்களை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென்று விரும்பி னாலும், அந்த விருப்பம் முழுமையாக நிறைவேறவில்லை. ஒரு கட்டத்தில் பயிற்சியாளர்கள் இவர்களிடம் கெஞ்சத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் பிஞ்சுகள் தங்கள் இயல்பை இழக்க வில்லை. அதுவொரு இனிமையான இயல்பு! அந்த இயல்பை பயிற்சியா ளர்களும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

சர்வதேச வீரர்கள் பயிலும் நீச்சல் குளம்!

இந்த நீச்சல் குளத்தைப்பற்றி அதன் நிர்வாகியிடம் கேட்டபோது, இது 1989 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபொழுது கட்டப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற சபரி என்ற மாணவன் 2012 இல் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றிருக் கிறான். அதைத்தொடர்ந்து நிதிஷ், சிறீ ராம், திவ்யா, சந்தியா ஆகியோர் சர்வ தேச ஜூனியர் போட்டிகளில் பங்கேற் றிருக்கின்றனர். இது கட்டும்பொழுது 12 அடி ஆழம் உள்ளதாகக் கட்டப்பட் டது. இப்போது பாதுகாப்புக் காரணங் களுக்காக 5.5 அடி ஆழம் மட்டுமே உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதற்கும் பொருந்தும். டைவ் அடிக்கக் கற்றுக்கொள்வதற்காக சென்னை வேளச்சேரி நீச்சல் குளம் மட்டும் 22 அடி ஆழம் உள்ளதாக இருக் கிறது. குந்தவை நீச்சல் குளத்தின் முதன்மைப்பயிற்சியாளர் எம்.கார்த்தி கேயன், இயக்குநர் பாபு ஆவர். அப் படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நீச்சல் குளத்தில்தான், சிறப்பான பயிற்சியா ளர்களிடம்தான் பிஞ்சுகள் நீச்சல் கற்றுக் கொண்டு திரும்பினர்.

ஆரிகாமி! கிரிகாமி! சப்தசிரிப்பு விளையாட்டு!

பழகுமுகாமின் இரண்டாம் நாளின் (27-04-2017) பிற்பகலில், காகிதச்சிற்பி ரமேஷ் ஆரிகாமி, கிரிகாமி போன்ற ஜப்பானின் காகிதக்கலையைக் கற்றுக் கொடுத்தார். இதில் வெறும் காகிதத்தில் பல்வேறு வடிவங்களை, உருவங்களை வடிவமைக்கும் கலையாகும்! சிறிது நேரத்திலேயே கற்றுக்கொண்டு பிஞ்சு களே செய்து காட்டி அசத்தினர். அவர் கள் செய்ததைக் கொண்டு ஒரு தோர ணம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில் உள் விளையாட்டரங்கில், சப்த சிரிப்பு விளையாட்டு என்று ஒரு வித்தியாசமான விளையாட்டை “கதை சொல்லி’’ இனியன் விளையாட்டை சிரிப்பாகவே சொல்லிக்கொடுத்தார். தமிழில் உள்ள உயிரெழுத்துக்களை சிரித்தபடியே உச்ச ரிக்கவேண்டும். இதுதான் விளையாட் டின் சட்டம். அடேயப்பா! சிரிக்காத வர்களும் சிரித்துவிட்டனர். வெறுமனே ஏதாவது சாக்கு கிடைத்தாலும் விடாமல் சிரிக்கிறவர்கள், சிரிப்பதையே விளை யாட்டாக்கினால்! கேட்க வேண்டுமா! சிற்றுண்டிக்குப்பிறகு அதே இனியன் “பெருவிரல் குள்ளன்’’ என்ற, இன்றும் புதுவையில் வசித்துக்கொண்டிருக்கும் 93 வயதான கி.ராஜநாராயணன் எழுதிய கதையை மிகவும் ரசிக்கத்தக்க வகை யில் சொல்லி மாணவர்களைக் கவர்ந்தார்.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு பிஞ்சுகள் விதித்த நிபந்தனை!

இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை! அதன்பிறகு “பெரியார்’’ திரைப்படம் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் குளுமை அரங்கில் திரையிடப்பட்டது. மாணவர்கள் பெரியவர்கள் எந்தெந்த இடத்தில் சிரித்து, கைதட்டி உணர்வு களை வெளிப்படுத்துவார்களோ, அந் தந்த இடங்களில் எல்லாம் அவர்களும் அந்த உணர்வுகளைக் காட்டி மற்றவர் களின் மனங்களை வென்றனர். பாதி திரைப்படம்தான் திரையிடுவதற்கு நேரமிருந்தது. நாளைக்கு மீதிப்படத்தை காட்டவேண்டும் என்று நிபந்தனையின் பேரில்தான் பலரும் விடைபெற்றுச் சென்றனர்.

பெற்றோர்களின் கவனத்திற்கு!

முதல் நாளில் போரடிக்கிறது என்று புலம்பிய சிலருக்கு இன்றுதான் பழகு முகாமின் சூழல் வரப்பெற்று மிகவும் உற்சாகத்துடன் புதுப்புது நண்பர்களு டன் ஏதோ இந்த அய்ந்து நாள்களிலேயே எல்லாவற்றையும் பேசித்தீர்த்துவிடுவது போல சலசலவென்று பேசிக்கொண்டேயிருந்தனர்.  சிலர் தங்கள் வீடுகளிலிருந்து பெற்றவர்களின் தவிப்புக்குரலையும் நிராகரித்து, “நான் இங்கே நன்றாகத்தான் இருக்கிறேன். சும்மா சும்மா போன் பண்ணி என்னைத் தொல்லை செய்யா தீர்கள்!’’ என்று தீர்த்துச் சொல்லிவிடு கின்றனர். அந்தப்பக்கத்தில் பெற்றவர்க ளுக்கு இருந்த தவிப்புநிலை மாறி, திகைத்துப்போய் விடுகின்றனர். இன் னும் சிலர் “இப்போதான் உங்ககிட்ட அடிவாங்காம சந்தோசமாக இருக்கி றேன். அதுகூட உங்களுக்குப் புடிக்க வில்லையா?’’ என்று குமுறிய போது, பக்கத்தில் நிற்கும் நமக்கு இதில் யார் குழுந்தை? யார் பெற்றோர்? என்று அய்யமே வந்துவிடுகிறது. அந்த பெரிய அறிவு படைத்த சின்னக் குழந்தைகள் ஒரு வழியாக 11 மணிக்கு தூங்கத் தொடங் கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner