எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேளாண்மைச் சுற்றுலா! கிளைடர் விமானம் செய்முறை!

மீண்டும் அவர்கள் விரும்பிய முழுமையான பெரியார் திரைப்படம்!

பெரியார் பிஞ்சுகளின் நாளாகவே அமைந்த நான்காவது நாள்!!!

தஞ்சை. மே 3- பெரியார் பிஞ்சு மாத இதழும், பெரியார் மணியம்மை பல் கலைக் கழகமும் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான பழகுமுகாமின் 4 ஆவது நாளில் வேளாண்மைச் சுற்றுலா வும்!, ஏரோனாட்டிக்ஸ் துறையினரின் உதவியுடன் கிளைடர் விமானம் செய்து பறக்கவிட்டும், பெரியார் திரைப் படத்தை முழுமையாகவும் பார்த்தும் மகிழ்ந்ததால், அந்தநாள் பெரியார் பிஞ்சுகளின் நாளாகவே மாறிப்போனது..

ஏப்ரல் 26- ஆம் நாள் தொடங்கி 30 ஆம் நாள் முடிய நடைபெற்றிருக்கின்ற பழகுமுகாமின் மூன்றாவது நாளின் இறுதியில், இன்னும் இரண்டு நாள் களில் இது முடிந்துவிடுமே என்ற ஏக்கம் பெரியார் பிஞ்சுகளின் மனதில் தேங்கத் தொடங்கிவிடுகிறது. அதன் எதிரொலிதான் ஆசிரியர் தாத்தாவிடம் “கேட்டலும் கிளத்தலும்’’ நிகழ்ச்சியில் நேருக்குநேர் நின்று பேசிய பிஞ்சுகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தபின், பழகுமுகாமை 10 நாள்கள் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத் திருக்கின்றனர்.

பிஞ்சுகளின் ஒருநாள் அறிவுலகம்!

செக்குமாட்டு வாழ்க்கை என்பது வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல குழந் தைகளுக்கும் சேர்த்துத்தான் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை மாற்றி அறிவுபூர்வமான ஒரு உலகத்தை பெரியார் பிஞ்சுகளுக்கு அறிமுகப்படுத் துவதுதான் இந்தப் பழகுமுகாம்! அந்த அறிவுலகம் என்பது, காலையில் எழுவதிலிருந்து தூங்கச்செல்லும்வரை பல் சுவை உணவுகளுடன் சேர்த்து விளை யாட்டும், அறிவும் கலந்ததுதான். முத லில் காலையில் அய்ந்தரை மணிக்கே எழுந்து தயாராகி பால், பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு 60,000 மரங்களும், மூங்கில் காடுகளும் உள்ள பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளல், அதைத்தொடர்ந்து ஏரோபிக்ஸ், கராத்தே, சிலம்பம், யோகா, பிற்பகலில் கால்பந்து, கைப் பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, எறி பந்து, சடுகுடு, கோகோ, ஆகியவற்றை கற்றுக்கொள்ளல், பின்னர் பல்வேறு துறைகள்சார்ந்த புதுப்புது அறிவைப் பெற்றுக்கொள்ளல், மனிதநாகரிகத்தின் வளர்ச்சிக்கு மிகமிகமுக்கியமாக தேவைப்படும் கேள்வித்திறனை வளர்த் தெடுக்கும் பகுதியாக கேள்விகளைக் கேட்டு பதில்களை பெற்றுக்கொள்ளல், அதிலும் மற்றமற்ற வகுப்பாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடம் மட்டு மல்ல, பல்கலைக் கழகத்தின் வேந்த ரான ஆசிரியர் வீரமணித் தாத்தாவிடமே கேள்வி கேட்கும் அரிய வாய்ப்பு! இந்த ஆண்டு கூடுதலாக நீச்சல் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இதுதான் அவர் களின் ஒருநாள் அறிவுலகம்!

பெரியார் பிஞ்சுகள் இருக்கிற இடத்தில் உற்சாகம் இருக்கிறதா? இல்லை உற்சாகம் இருக்கிற இடத்தில் பெரியார் பிஞ்சுகள் இருக்கின்றனரா? என்று பகுத்தறிய இயலாதவொரு மயக்கம் ஏற்பட்டுப்போய் விடுகின்றது. வகுப்பு நேரத்திலும்கூட சிறுசிறு சலசலப்பு தோன்றாமல் இருக்காது. அதையும் மிகச்சரியாக கையாண்டுதான் அவர்களுக்கு எதுவுமே கற்றுத்தரப்படு கின்றது. அப்படியிருக்கையில் வெளி யில் செல்வதென்றால்! கேட்கவே வேண்டாம். ஒட்டுமொத்தமாக 130 பறவைகள் ஓரிடத்தில் இருந்தால் எப்படிப்பட்ட ஆரவாரம் இருக்குமோ அதற்கு இரண்டு பங்கு 130 பெரியார் பிஞ்சுகள் இருக்கிற இடத்தில இருக் கும். அப்படித்தான் நான்காவது நாளில் (29-.4.-2017) இரண்டு பேருந்துகளில் அவர்களை ஏற்றிக்கொண்டு பல்கலைக் கழகத்தின் வளாகத்தைத் தாண்டும் போது ஒரு பேரிரைச்சல் ஏற்படும்! அந் தப்பேரிரைச்சலோடு கலந்துவிடத்தான் அல்லது இசைந்துவிடத்தான் யாராகயிருந்தாலும் முடியுமேதவிர வேறொன் றும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அந்த இடத்தில் இந்த செக்குமாட்டு வாழ்க் கையிலிருந்து பிஞ்சுகள், பெரியவர்க ளுக்கே கற்றுக்கொடுப்பது போலவே இருக்கிறது.

உளவியல், வனவியல் துறைகளில் பயிற்சி!

தஞ்சை ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரிக்கு கல்விச் சுற்றுலா செல்லும் போது அப்படிப்பட்ட ஆனந்த ஆரவா ரத்துடன்தான் புறப்பட்டோம். உள்ளே சென்றதும் அனைவருக்குமே ஒரு புதுமை! வியப்பு! ஏறக்குறைய பொள் ளாச்சிப் பகுதிகளில் உள்ள தென்னை மரத்தோப்புகளுக்கே சென்றுவிட்டது போலிருந்து. ஆயிரக்கணக்கான மரங் கள் இந்தக்கோடையிலும் பசுமையாக இருக்கும் வண்ணம் பராமரிக்கப்பட்டி ருந்தது. எந்தப்பக்கம் நின்று பார்த்தா லும் வரிசை மாறாமல் இருந்த மரங் களைக்கண்டு வியப்புதான் ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில்தான் நாம் மறந்து போன, மறக்கக்கூடாத உழவியல், வன வியல் துறைகளைப் பற்றி அதன் உத விப்பேராசிரியர்களான கிருஷ்ணன் பிரபு, சக்திவேல் ஆகியோர் பிஞ்சுக ளுக்கு அங்கு செயல்படுத்தப்படும் பணிகளைப்பற்றி விவரித்தனர். பிஞ்சு களும் ஆவலுடன் கேட்டுக் கொண்ட னர். விவசாயம் தொடர்பான எல்லா வகையான உழவியல் கருவிகள், அள விடும் அறிவியல் மாணிகள் ஆகியவற் றைப்பற்றி பிஞ்சுகள் பார்த்துத் தெரிந்து கொண்டனர். பிஞ்சுகள் எங்கே சென்றா லும், சூழலுக்கேற்ற உணவு, பான வகைகளும் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதற்காக பேராசிரியர் விமலா தலைமையில் 30க்கும் மேற் பட்ட ஒரு பெரிய குழுவே பின்னணியில் இருந்து ஓயாமல் பணிசெய்து கொண் டிருந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு பெரிய மாந்தோப்பை பார்வையிடும் வாய்ப்பு பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்டது. அது வும் மாங்காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்து பிஞ்சுகளின் கைகளுக்கே எட் டும் வண்ணம் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர்களின் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. பிஞ்சுகள் ஆசையாசையாக பறிக்கத் தொடங்கி விட்டனர். ஒருங்கிணைப்பாளர்களை யும் பறித்துத்தரப் பணித்தனர். மறுத்தா லும் விடாமல் கேட்டனர். அந்தத் தோப்புகளை பராமரிக்கும் பெண்கள் இதைப்பார்த்ததும் பெற்ற பிள்ளைகள் ஆசையோடு உண்பதைப்பார்க்கும் தாயைப்போல ஆனந்தப்பெருக்கோடு உணர்வுவயப்பட்டு நின்றனர். பிறகு நாமென்ன செய்வது! பிஞ்சுகள் வென் றனர். சிலபல மாங்காய்கள், மாம்பிஞ்சுகள் அவர்களின் தோள்பைகளில் தஞ்சமடைந்திருந்தன.

கிளைடர் விமானமும்! பிஞ்சுகளின் அறிவும்!

மீண்டும் பல்கலைக்கழக வளாகம் திரும்பி மதிய உணவு முடித்ததும் வள்ளுவர் அரங்கில் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக எரோனாட் டிக்ஸ் இன்ஜினீரியங் துறையினரும், இதே துறையிலிருந்து வெளியிலிருந்தும் வந்திருந்தும் பிஞ்சுகளுக்கு ஒரு கிளை டர் விமானம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர். இதுதொடர்பான ஒளிப்படங்களும் திரையிட்டுக் காட் டப்பட்டன. தொடர்ந்து கிளைடர் விமானத்தின் மாதிரி (விஷீபீமீறீ) செய் வதற்கான உதிரிப்பொருள்கள் கொடுக் கப்பட்டு அனைவருமே கிளைடர் விமானம் செய்தனர். செய்துவிட்ட பிறகு பறக்கவிட்டும் பார்த்தனர். அவர வர்கள் செய்கின்ற விமானங்கள் அவ ரவர்களுக்கே நிறைவுநாள் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் என்று ஒரு அறிவிப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் யாரிட மும் சொல்லவில்லை! கேட்கவில்லை! நாம் செய்ததை நமக்கே எப்படிக் கொடுப்பது என்ற கேள்வி அவர்களுக் கேத் தோன்றி, அதற்கு அவர்களே பதில் கண்டுபிடித்து அவரவர்கள் செய் ததில் அவர்களுடைய பெயரும் மற்ற மற்ற அடையாளங்களையும் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். இதைக்கண்டு மற்றவர்கள் அசந்துதான் போயினர்.

மாலையில் வழக்கமான விளை யாட்டுகள் முடிந்ததும் மூன்றாவது நாளில் (28-.4-.2017) மாலையில் ஆசிரியர் தாத்தா பெரியார் படம் பார்த்தீர்களா? என்றொரு கேள்வியை கேட்டதற்கு, “பார்த்தோம். ஆனால், பாதியைத்தான் காட்டினார்கள்’’ என்று அசிரியர் தாத்தா விடமே புகார் போலச் சொல்லிவிட் டனர். மேடையிலேயே ஆசிரியர் தாத்தா பிஞ்சுகளின் குறையைப் போக்கும் வண்ணம், நாளை (29.4.-2017) ‘பெரியார்’ திரைப்படத்தை முழுமையாக திரையிட்டுக்காட்டும்படி ஒருங்கிணைப்பா ளர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி அறிவியல் அறிஞர் “ஆல்பர்ட் அய்ன்ஸ் டின் குளுமை அரங்கில்’’ மாலை 7மணிக்கு பெரியார் திரைப்படம் முழு மையாகத் திரையிட்டு காட்டப்பட்டது. படம் 9:20 க்கு நிறைவடைந்தது. பெரி யவர்கள் எந்தெந்த இடங்களை எப்படி யெப்படி ரசிப்பார்களோ அதே உணர் வோடு பிஞ்சுகளும் அதை ரசித்தனர். ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனை வரும் முழுமையாக பார்த்து விட்டனர். ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மிகுந்த மனநிறைவு!

இரவு அவர்களின் அறைகளுக்குச் சென்றபிறகு புதிதாகக் கிடைத்து, அவர் களின் எண்ணங்களோடு பின்னிப்பி ணைந்து போன நண்பர்களையும், இந்த சூழலையும் நாளையிலிருந்து இழக்கப் போவதை எண்ணி வெளியில் துணிச் சலாகப் பேசியவர்கள் சிலர் குளிய றைகளில் அழுதிருக்கின்றனர். மற்ற வர்கள் ஒருங்கிணைப்பாளர்களிடமே புலம்பியிருக்கின்றனர். பிஞ்சுகள் மட்டுமல்ல அவர்களுடனேயே காலையிலிருந்து இரவுமுழுவதும் உடனிருந்த ஒருங்கிணைப்பாளர்களும் கலங்கத் தொடங்கினர். எதைஎதையோ பேசிய படி இரவு 11 மணிக்கு மேல் நிறைவு நாளான 5 ஆவது நாளை எதிர்பார்த்த படியே உறங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner