எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, மே 6- 29.04.2017 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவும் திராவிடர் கழ கத்தலைவர் ஆசியர் கி.வீரமணி அவர் கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 12-ஆம் பாகம் நூல் அறிமுக விழாவும் மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ. எஸ். அரங்கில்மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் சுப.முருகானந் தம் அனைவரையும் வரவேற்றார்.  விழா வின்  தொடக்கத்தில் சொ.நே.அன்புமணி புரட்சிக்கவிஞர் பற்றிய கவிதையை வாசித்தார். தொடர்ந்து இ.மு.கவின்மதி, ல.மு.அகிலாராசன், செ.விவேகபாரதி, சொ.நே.அறிவுமதி,பா.கி. சிவகாவியா ஆகியோர் ‘அவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்’ என்னும் தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாடல்களைக்கூறி தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

வா.நேரு

நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத் தின் மாநிலத்தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் தனது உரையில் “பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுத்ததன் அடிப் படையில் புரட்சிக்கவிஞர் விழா இன் றைக்கு மதுரையில் நடைபெறுகின்றது. புரட்சிக்கவிஞர் இன்றைக்கு தேவைப் படுகின்றார் என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புரட்சிக்கவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மிக விரிவாக செய்தியாளர்களிடம் பேட்டியளித் துள்ளார். புரட்சிக்கவிஞரின் கவிதைகள் இன்றைய தலைமுறையிடம் போய்ச் சேரவேண்டும். வாட்ஸப், பேஸ்புக், டுவிட்டர், மீம்ஸ் என இணைய தளத் தில் பயன்படுத்த புரட்சிக்கவிஞரின் கவிதைகள் கருத்துக்கருவூலங்கள். இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நம்முடைய வாழ்க்கை சிக்கல்களை அவிழ்க்கும் திறன் பெற்றவை.

அனுபவ அறிவையும், தான் தேடித் தேடிப் படிக்கும் புத்தகச் செய்திகளை யும், 75 ஆண்டுகால பொது வாழ்க்கை யில் பெற்ற மனிதர்களைப் பற்றிய அணுகுமுறைகளையும் இணைத்து நமக்கு ஆசிரியர் கொடுத்திருக்கின்றார். புரட்சிக்கவிஞரையும், வாழ்வியல் சிந் தனைகளையும் இணைத்துக்கொடுக்கும் இந்த விழா இனிப்பான விழா, மதுரை யில் இப்படிப்பட்ட கருத்தரங்குகள் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தால் நடத்தப்படவேண்டும் என உரையாற் றினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மாநில அமைப்புச்செயலாளர் வே.செல் வம், மதுரை மண்டலச்செயலாளர் மா. பவுன்ராசா,மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதியரசர் பொ.நடராசன்

தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதியரசர் பொ. நடராசன் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் 12-ஆம் பாகத்தின் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தனது உரை யில் ‘வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை களைத் தமிழர் தலைவர் அவர்கள் 2003ல் எழுத ஆரம்பித்தார். இப்போது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரை 1000-மாவது கட்டுரை. இந்த நூலின் முன்னுரையில் ஓர் அருமையான கருத்தை ஆசிரியர் கூறுகின்றார் எண் ணிக்கைகாகவோ, எழுதி இடத்தை நிரப்பவேண்டும் என்பதற்காகவோ நான் எழுதியதில்லை.

தாகம் எடுத்துக்குடிக்கும் தண்ணீருக் குத்தானே பயன் அதிகம். உணர்ந்த போதும், உந்தப்பட்டபோதும் தான் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வடிவம் எடுத்தன எனக்கூறுகின்றார் எனக் குறிப் பிட்டு வாழ்வியல் சிந்தனைகள் கட்டு ரைகளில் உள்ள ‘எவரிடமும் பாடம் கற்கலாம்‘, உள்ளிட்ட பல வாழ்வியல்  சிந்தனைகள் கட்டுரைகளில் உள்ள கருத்துக்களை வாழ்க்கையின் நிகழ்வு களோடு குறிப்பிட்டு உரையாற்றினார். தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகள் நூலின் 12-ஆம் பாகத்தை திராவிட முன் னேற்றக்கழகத்தின் சொற்பெருக்காளர் துரை.எழில்விழியன் அவர்கள் வெளியிட, திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

துரை.எழில்விழியன்

தொடர்ந்து நூல்களை துரை.எழில் விழியன் அவர்களிடமிருந்து கழகப் பொறுப்பாளர்கள்,மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர். நிறைவாக புரட்சிக்கவிஞர் ஒரு பன் முகப்பார்வை என்னும் தலைப்பில் தி.மு.க.வின் சொற்பெருக்காளர் துரை.எழில்விழியன் அவர்கள் உரையாற்றி னார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞர் என்னும் பெயரைச் சொல்கின்ற போதே நமது நாடி நரம்புகளில் முறுக் கேறும். உலகத்தில், இந்தியாவில் வேறு எந்தக்கவிஞருக்கும் இல்லாத பல சிறப்புக்களைப் பெற்றவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். பாரதிதாசன், பாவேந் தர் எனப் பல பெயர் இருந்தாலும், இங்கு கவிதை வாசித்தவர் சொல்லியது போல நமக்கு அவர் புரட்சிக் கவிஞர் தான், தங்கப்பெட்டகம்தான் என்ப தனை விரித்துரைத்து புரட்சிக்கவிஞர் என்னும் பெயர் ஏன் அவருக்கு ஏற்பட் டது என்பதனை புரட்சிக்கவி காப்பியத் தின் கதையை விளக்கி, குடியரசை விரும்பும் கதாநாயகனின் பாத்திரப் படைப்பைக் கூறி அதில் வரும் பல கவிதைகளை அரங்கில் மனப்பாடமாய் ஏற்ற இறக்கங்களுடன் முழக்கமிட்டார். ‘ நீரோடை நிலங்கிழிக்க ‘ என்னும் கவிதையின் சிறப்பை விளக்கினார்.

தந்தை பெரியாரும்,பேரறிஞர் அண் ணாவும், முத்தமிழ்க் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களும் புரட்சிக்கவிஞரை எவ்வளவு நேசித்தார்கள், பாராட்டினார் கள், அவரது கவிதையை திராவிடர் இயக்கத்தினர் எப்படி தங்கள் உரைக ளில் பயன்படுத்தினார்கள் என்பதனை விளக்கினார். தமிழின் பெருமையை, இயற்கையை, முதியோர் காதலை எப்படியெல்லாம் புரட்சிக்கவிஞர் பாடினார் என்பதையும் சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள் பற்றியெல்லாம் எப்படி வீரியமிக்க,உணர்வுமிக்க கவி தையைப் பாடினார் என்பதையும், இந்தி மீண்டும் திணிக்கப்படும் நிலை யில் இந்தி எதிர்ப்பு பற்றி புரட்சிக் கவிஞரின் பாடல்களையெல்லாம் உணர்வு பொங்க எடுத்துரைத்து, புரட் சிக்கவிஞர் பற்றிய ஆய்வுரையாக தனது உரையினை துரை.எழில்விழியன் உரை யாற்றினார்.

நிறைவாக மதுரை மாநகர்  மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் பெரி.காளியப்பன் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் பா.சடகோபன், செல்ல.கிருட்டிணன், செல்வசேகர், மேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகச்செயலாளர் வேம்பன், உசிலம்பட்டி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மன்னர்மன்னன், மாவட்டச் செயலாளர் ஆசிரியர் சுப்பிரமணியன், திராவிடர்கழகப்பொறுப்பாளர்கள் மக ளிரணி இராக்கு,இளமதி,ந.முருகேசன், மாரிமுத்து, ஆட்டோ செல்வம், இரா.திருப்பதி,இராஜேந்திரன், க.அழகர், இராசா,அழகுபாண்டி,சுரேசு,மேலூர் மாவட்ட திராவிடர்  கழகச்செயலாளர்  மோதிலால்,  உசிலை மாவட்டச் செய லாளர் ரோ.கணேசன், கனி, ஆசிரியர் இராமசாமி   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner