எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மே 6- புதுக்கோட்டை மாவட்டம் இராங்கியத்தில் பெரியார் பெருந்தொண்டர் இராமதி.இராசன் அவர்களது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட் டத் தலைவரும் மாவட்ட ப.க.தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் ஆசிரியர் இராமதி.இராசன் அவர்கள் கடந்த 3.5.2017 அன்று மறைவுற்றார். இறுதி நிகழ்ச்சி 5.5.2017 பகலில் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையில் காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.பிராட்லா மண்டலத் தலைவர் பெ.இராவணன், மண்டலச் செயலாளர் சு.தேன்மொழி, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, கழகப் பேச்சாளர் மாங்காடு சு.மணியரசன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

நினைவேந்தல்

அன்னாரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 7.5.2017 அன்று காலை 10.30- மணிக்கு இராங்கியம் பெரியார் இல்லத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகிக்கிறார். அனைவரையும் ப.க. மாவட்டச் செயலாளர் இரா.மலர்மன்னன் வரவேற்கிறார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். நினைவேந்தல் உரையை தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மண்டலச் செயலாளர் சு.தேன்மொழி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப் பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இரா.இளங்கோ, மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் இர.புட்ப நாதன், கு.கண்ணுச்சாமி, திமுக ஒன்றியச் செயலாளர் பெ.சரணவன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சித.ஆவுடையப்பன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner