எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடலூர் புலவர் சு.இராவணனின் புதிய இல்லத்திறப்பு விழா

வடலூர், மே 7- வடலூர் நகர திராவிடர் கழக தலைவர் புலவர் சு.இராவணன் புதிய இல்லத்தை 3.5.2017 அன்று காலை 11 மணியளவில் வட லூரில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

திருவலச்சுழி செயமணி குமார் மந்திரமல்ல - தந்தி ரமே எனும் நிகழ்ச்சியை தொடக்கத்தில் நிகழ்த்தினார். புலவர் சு.இராவணன் வர வேற்புரையாற்றினார்.

பேராசிரியர் இராச.குழந் தைவேலன், மண்டல செய லாளர் சொ.தண்டபாணி, ஓய் வுபெற்ற ஆசிரியர்கள் இராதா கிருட்டிணன், சபேசன், ஜெய விசயன், கடலூர் மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசி ரியர் பூ.சி.இளங்கோவன், செயலாளர் அன்பு.சித்தார்த் தன், விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் அ.இளங் கோவன், செயலாளர் முத்து.கதிரவன், மாநில இளைஞ ரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகம், செயலாளர் க.சிந்த னைச்செல்வன், மண்டல தலைவர் சி.காமராசு, புதுச் சேரி கழக பொதுக்குழு உறுப் பினர் ஜி.கிருட்டிணமூர்த்தி, கவிஞர் தாமரைக்கோ ஆகி யோர் உரையாற்றினர். வாழ் வியல் சிந்தனைகள் 3ஆம் பாகம் அனைவருக்கும் பரி சாக வழங்கப்பட்டது.

திருவள்ளுவர் இல்லம், தந்தை பெரியார் இல்லம் எனும் இரு இல்லங்களையும் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்த வைத்து மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்துக்களையும், வாஸ்து மோசடி பற்றியும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் தமிழர் விரோதப் போக்கு குறித்தும் சிறப்பான கருத்துக்களை திறப்புரையா கப் பேசினார்.

நிகழ்வில் மண்டல இளை ஞரணி செயலாளர் வி.திரா விடன், மாவட்ட அமைப்பா ளர்கள் சி.மணிவேல், கு.தென்னவன், மாவட்ட மகளி ரணி செயலாளர் முனியம் மாள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நா.உதயசங்கர், டிஜிட்டல் ராமநாதன், விருத் தாசலம் சிலம்பரசன், தமிழ்ச் செல்வன், கழக பேச்சாளர் யாழ்திலீபன், காட்டுமன்னார் குடி அருள்ராசு, வடலூர் செய லாளர் இரா.முத்தையன், நெய்வேலி பாஸ்கர், புதுவை சீனு தமிழ்நெஞ்சன், கோ.மு. தமிழ்ச்செல்வன், குணசேக ரன், மீன்சுருட்டி இரா.திலீ பன், மு.கருணாமூர்த்தி, அமுதா, செல்வராணி, லீலாவதி, கலைச்செல்வி, மருவாய் திரு நாவுக்கரசு, குறிஞ்சிப்பாடி செ.வேல்முருகன், இராம.இந்திரசித், நூலகர் இரா.கண்ணன், வடலூர் பெரியார் புத்தக நிலைய நிர் வாகி இராசேந்திரன் ஆகி யோர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் இரா. குணசேகரன் நன்றி கூற விழா இனிதே நிகழ்வுற்றது.


 

விடுதலை வாசகர் வட்டம், மதுரை - குடும்ப விழா

நாள்: 13.5.2017 சனிக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி முதல் 4 மணி வரை

இடம்: மதுரை இல்லத்துப் பிள்ளைமார் புட்டுத் திருக்கண் திருமண மண்டபம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை

1. ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

2. வேம்பன் (மேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலர்) அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.

3. கழகக் குடும்பத்தினர் ஆடல், பாடல், உட்பட பல்சுவை கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம். பங்கு பெறும் அனைவருக்கும் பரிசுகள் நிச்சயம்.

குறிப்பு: தோழர்கள் ஏதேனும் கலைநிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் முன்கூட்டியே தெரியப்படுத்தவும். அனைவரும் குடும்பத்தோடு வருவது மட்டுமல்லாது, தங்கள் உறவினர் அல்லது நண்பர் குடும்பத்தையும் அழைத்து வரும்படி வேண்டுகிறோம்.

(குறிப்பு: அனுமதிக்கட்டணம் ஒரு நபருக்கு ரூ.150/- மட்டும். 10 வயதிற்குட்பட்டோருக்கு கட்டணமில்லை)

10.5.2017க்குள் தோழர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும்.

தொடர்புக்கு: 9443472914, 9710944833.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner