கிராமப்புற மாணவர்களுக்கு பேரிடியாக உள்ள ‘நீட்’ தேர்வு பிரச்சினை
மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறினால்தான் வழி கிடைக்கும்!
நெமிலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
அரக்கோணம், மே 7 அரக்கோணம் கழக மாவட்டம் நெமிலி, பேருந்து நிலையம் அருகில் 6.5.2017 அன்று மாலை 6.30 மணிக்கு திராவிடர் கழக பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடந்தது.
பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் தீனதயாளன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோபி, சீவன்தாசு, கழக சொற்பொழி வாளர் மு.சங்கர், நகரத் தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். மாவட்டத் தலைவர் லோகநாதன் தொடக்கவுரை யாற்றினார். வேலூர் மண்டல தலைவர் சடகோபன், காஞ்சி மண்டலத் தலைவர் எல்லப்பன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சரவணன், அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர்கள் இரா.ஜெயக்குமார் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றி னார்கள். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
தற்போது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பேரிடியாக உருவாகியுள்ள நீட் தேர்வு பற்றியும், மருத்துவ மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு இழப்பு, போன்றவைகளை எடுத்துக் கூறி இது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறினால்தான் வழிகிடைக்கும் எனவும் திராவிடர் கழகம், மக்களுக்காக ஆற்றிவரும் தொண்டுகளைப்பற்றி எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி, மாவட்டச் செயலாளர் அறிவுச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் பொதுக்குழு உறுப்பினர் இராமேஸ்வரம் சிகாமணி, காஞ்சி மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மாவட்ட ப.க.தலைவர் சிவஜோதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இளந்திரையன், நெமிலி ஒன்றியத் தலைவர் சங்கர், மாவட்ட ப.க. செயலாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரஞ்சித், காவேரிப்பாக்கம் ஒன்றியத் தலைவர் இராவணன், பொதுக்குழு உறுப்பினர் ஆண்டாள் தீனதயாளன், மாவட்ட மகளிரணி தலைவர் பிரேமா, நெமிலி கோபி, வடக்குத்து திராவிடன் நகரச் செயலாளர் பெரியார் நேசன், தோழர்கள் கங்காதரன், கொள்ளாபுரி அருள்நெஞ்சன், இராவணன், ராஜா, மூர்த்தி, முரளி, ஜானகிராமன், பச்சையப்பன், சுகுமார், ஆறுமுகம், ஆனந்தன், ரமேஷ், ஞானப்பிரகாசம், ஆலப்பாக்கம் கிருபாகரன், அ.பன்னீர்செல்வம், பூவை.முருகேசன், நடராஜன், இரமேசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்டத்துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
தமிழர் தலைவர், நெமிலிக்கு வருகை தருவதை ஒட்டி நகரம் முழுவதும் வரவேற்பு பதாகைகள் வைக்கப் பட்டிருந்தன. கழகக்கொடிகள் நகரை அலங்கரித்தன. இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சிமுகாம் மிகச்சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
வரவேற்பு - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை அருகே டிஏஜி அசோகன், காஞ்சி கதிரவன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்து தேநீர் வழங்கினர்.
சேந்தமங்கலம் கூட்டுச்சாலை
சேந்தமங்கலம் கூட்டுச்சாலைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் ஏராளமான தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்ற னர். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், கழகப் பொதுச்செயாளர் இரா.ஜெயகுமார், வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் உடன் இருந்தனர்.
நெமிலி வரவேற்பு
நெமிலி நகருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கடைவீதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் எம்.ஏ.தமிழ்சாலி (நெல் அரிசி மொத்த வியாபாரி சங்கம், ஏ.கார்த்திக், கே.சிவா, ஏ.பசுபதி உட்பட ஏராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்ற போது அங்கு ஏராளமான மக்கள் குழுமி இருந்தனர்.
பயிற்சி முகாம்
பயிற்சி முகாமுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஏராளமான மாணவர்கள், மாவட்ட கழக, மண்டல கழக பொறுப்பாளர்கள் டிஏஜி அசோகன், அ.லோகநாதன், பு.எல்லப்பன், காஞ்சி கதிரவன், செ.கோபி, ஸ்டாலின், சோமசுந்தரம், சூர்யகுமார், சுரேஷ், பெரியார்நேசன் ஆகியோர் பயனாடை அணிவித்தும் கொள்கை முழக்கமிட்டும் அன்போடு வரவேற்றனர்.
சர்வ கட்சியினர் சம்பத்துராயன்பேட்டையில் வரவேற்பு
பயிற்சிமுகாம் முடிந்து சம்பத்துராயன்பேட்டைக்கு மதிய உணவுக்காக சென்றபோது எம்எஸ்.விநாயக மூர்த்தி இல்லத்தில் கட்சி சார்பற்று அனைத்து கட்சியினரும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திமுக ஒன்றிய செயலாளர் வடிவேலு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பவானி, பேரூர் ஜனார்தனன், வி.பி.குணசேகரன், எம்.பி.பாபு, அப்துல்ரஹ்மான், நெமிலி சங்கர், இ.கிருட்டிணன் (பா.ம.க.), குமார் (பா.ம.க.), நவநீதகிருட்டிணன், ஞானப்பிரகாசம் (மதிமுக), இளஞ்செழியன் (திமுக), எஸ்.சக்திவேல் (திமுக), முருகன் மெஸ் ஏசிகே வடிவேலு, எம்.எஸ்.விநாயகம் (அதிமுக), சூரியகுமார் (தி.க.), வி.இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
அரசுப் பள்ளியில் பாசமிகு வரவேற்பு
சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் வேலு, சந்திரசேகரன், விநாயகம், சூரியகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்துவதற்கு தங்களிடம் மனு கொடுத்தோம். அய்யா நீங்கள் தான் கடுமையாக முயற்சி செய்து முதல்வர் கலைஞர் அவர்களிடம் வலியுறுத்தியதால் தான் இந்தப் பள்ளி உயர்ந்தது திறப்பு விழாவிற்கு அழைத்தோம். ஆனால் நீங்கள் நான் வருவதைவிட பள்ளி சிறப்பாக நடக்க வேண்டும் கிராம மாணவர்கள் பயன்பெற வேண்டும் அந்த பகுதிக்கு வரும்போது வருகிறேன் என கூறினீர்கள். நீங்கள் வந்து பள்ளியை பார்க்க வேண்டுமென அழைத்தனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளிக்குச் சென்ற ஆசிரியரை அன்போடு வரவேற்று கல்வெட்டில் தமிழர் தலைவரின் பெயரை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டி தங்கள் பெருமகிழ்வை தெரிவித்தனர்.
கேபில் டிவி அலுவலகம்
நெமிலியிலுள்ள பிரபல கேபில் தொலைகாட்சியான எம்பி டிவி அலுவலகம் சென்று ஒளி, ஒலி பரப்புகளையும் பார்வையிட்டு அங்கு பணிபுரியும் தோழர்களையும் பயனாடை அணிவித்து பாராட்டினார். எம்பி டிவி தொலைகாட்சியின் பங்குதாரரும், கேபில் டிவி ஆபரேட்டர்கள் சங்க பொதுச் செயலாளருமான தாமோதரன் பயனாடை அணிவித்து ரூ. 10,000 காசோலையினை பெரியார் உலகத்திற்காக வழங்கினார். உடன் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். பணியாளர்கள் சார்பில் பழங்களை வழங்கி தமிழர் தலைவரை வரவேற்றனர்.
தமிழர் தலைவர் செல்லும் வழியெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளிப்பதும், அன்போடு கைகொடுப்பதும், பெரியார் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் ஏராளம் அந்தப் பகுதியில் வந்து சந்தித்ததும், வியாபாரிகள் தமிழர் தலைவரின் உரையை கேட்க திரண்டு வந்ததும் மிகச்சிறப்பாகும். தமிழர் தலைவர் பேசத் துவங்கியதும் அதை தெரியப்படுத்தும் விதமாக வாண வேடிக்கைகள், தொடர் பட்டாசுகள் வெடித்தும் பரப்பரப்பாக்கி சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தந்தை பெரியார் கொள்கையின் தாக்கத்தாலும் தமிழர் தலைவரின் உழைப்பாலும் பயன்பெற்ற சமுதாயமாக, கிராம மக்களும் நன்றி செலுத்தியது. இந்த இயக்கம் இன்னும் உழைக்க வேண்டும் என்பதற்கான உந்துசக்தியாக அமைந்தது.