எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 17- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா 13.5.2017 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி ராஜாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு வர வேற்புரையாற்றினார். புதுச் சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக துணைத் தலை வர் புதுவை மு.ந.நடராசன், தொழில் அதிபர் பெரியார் நகர் இரா.சடகோபன், பொதுக்குழு  உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, விலாசினி இராசு, உழ வர்கரை நகராட்சி கழகத் தலை வர் சு.துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச் சேரி மாநில திராவிட முன்னேற்ற கழக தெற்குபகுதி அமைப்பா ளர் பிப்டிக் சேர்மன் இரா.சிவா (சட்டமன்ற உறுப்பினர்), வாழ் வியல் சிந்தனைகள் நூலை வெளியிட புதுச்சேரி முதல்வ ரின் நாடாளுமன்ற சிறப்பு பிர திநிதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜான்குமார் நூலை பெற்றுக் கொண்டார். நூல் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய அணி செயலாளர் தோழர் கீத நாதன், புதுச்சேரி மாநில மனித நேய மக்கள் கட்சியின் செயலா ளர் பஷீர்அகமது, புதுச்சேரி மாநில தமிழர் தேசிய இயக் கத்தின் தலைவர் இரா.அழகிரி, மாநில தலைவர் சிவ.வீரமணி மண்டல தலைவர் இர.இராசு ஆகியோர் உரையாற்றினர். புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம் நன்றி கூறினார்.

நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர்கள் பொ.தட்சிணா மூர்த்தி, காரை பெரியார் முரசு, கி.வ.இராசன், ஓய்வு பெற்ற வங்கி மேளாளர் சி.என்.பிள்ளை, பத்மா பிள்ளை, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், மனித நேய மக் கள் கட்சியின் பொறுப்பாளர் முகமது சையத், வாணரப் பேட்டை பெ.ஆதிநாராயணன், புதுச்சேரி நகராட்சி கழக செய லாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா, பெரியார் படிப்பக க.கணேசன் மற்றும் பல்வேறு கட்சியினர், தோழர் கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner