எழுத்துரு அளவு Larger Font Smaller Font

“வாழும் போது குருதிக் கொடை, இறந்த பின் உடற்கொடை” என்ற தமிழர் தலைவரின் சொல்லுக்கிணங்க பெரியார் பெருந்தொண்டரும்,திருப்பூர் மாநகர கழக அமைப்பாளருமாகிய ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சி.முத்தையா அவர்கள் தான் இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக கொடுக்கும் பொருட்டு கடந்த 05.04.2017 அன்று திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  உடற் கொடை பதிவு செய்தார். அதற்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கழக இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் அவர்களிடம் வழங்கினார்.திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் குமாரசாமி உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட இளைஞரணி,மாணவரணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். (பெரியார் புத்தக நிலையம்,திருப்பூர் 21.05.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner