எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 7- 2017 ஜூன் 2ஆம் நாளன்று தமிழக மூதறிஞர் குழு (ஜிணீனீவீறீ ழிணீபீu மிஸீtமீறீறீமீநீtuணீறீ’s திஷீக்ஷீuனீ)வின் செயற் குழு கூட்டம் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழக மூதறிஞர் குழுவின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்த £ர்.

அரசு மற்றும் பல்வேறு துறைகளில் சேவையாற்றி பணி நிறைவு பெற்ற முதுநிலை குடிமக்களை அங்கத்தினர் களாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக மூதறிஞர் குழு, நாட்டை, மக் களை பாதிக்கும் கொள்கை முடிவுகள், ஆக்க ரீதியானமுன்னேற்றம் கருதிய திட்டங்கள், சமூக, பொருளாதார, அர சியல் தளங்களில் மக்களின் கவனத்தை - ஈர்க்கின்ற பாதிப்பினை ஏற்படுத்தவல்ல நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கை பற்றிய வல்லுநர் தம் உரைவீச்சு மற்றும் அது தொடர்பான விவாதங்கள் என பலதரப்பட்ட வகையில் கருத்து விருந் தினை கலந்துரையாடும் வாய்ப்பினை தமிழக மூதறிஞர் குழு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

“மாதம் ஒரு முறை சந்திப்போம்; மானிடர் மேம்பட சிந்திப்போம்” என் பதை செயல்பாட்டு வளமையாக தமி ழக மூதறிஞர் குழு கொண்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட நடைமுறை முடிவுகள் எடுக்கப்பட்டன:-

1. உறுப்பினர் சேர்க்கை: பணி நிறைவு பெறுவோர் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் புதிதாக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்திட வேண்டும்.

2. மூன்றுமாதக் கூட்டங்களின் உரை வீச்சுத் தலைப்பினை முன்கூட்டியே தீர்மானித்து, உரிய வல்லுநர்களை தொடர்பு கொண்டு, அவர்தம் வருகை யினை உறுதி செய்து கூட்டம் நடத்தப் பட வேண்டும்.

3. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக் கிழமை மாலை கூட்டம் நடத்தப்படவேண்டும்.

4. கூட்டம் நடைபெறும் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள் மிகாமல் ஏற்பாடு செய்தல் வேண்டும். மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 8.30 மணிக்கு கூட்டம் நிறைவு பெறுதல் நலம் பயக்கும்.

5. பொழிவின் கால அளவு ஒரு மணிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொழிவிற்குப் பின்னர் அய்யப்பாடு கலைதல், விளக்கம் கோரல் எனும் நிகழ்வு 30 நிமிடங்கள் நடைபெறுவது அவசியம்.

6. ஒவ்வொரு கூட்டத்திற்கும் முறை யான தெரிவிப்பு, செய்தி ஊடங்களில் தகவல் என முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பங்கேற்பாளர்கள் மிகப் பலராக கலந்து கொள்ள ஏற்பாடு கள் செய்திடல் வேண்டும்.

7. தம் பணி பட்டறிவுப் பகிர்வு, மருத்துவ ஆலோசனைகள் குறித்தும் கூட்டங்கள் நடத்தப்படல் வேண்டும்.

கூட்டத்தின் முடிவில் தமிழக மூதறி ஞர் குழுவில் புதிதாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புரவலர்கள்: கி.வீரமணி, ஜஸ்டீஸ் எஸ்.மோகன்

தலைவர்: நீதிபதி ஏ.கே.ராஜன்

துணைத் தலைவர்கள்: வரியியல் வல்லுநர் எஸ்.ராஜரத்தினம், கவிக் கொண்டல் மா.செங்குட்டுவன், கோ.கருணாநிதி, பொறியாளர் இன்பக்கனி

செயலாளர்: நீதிபதி இரா.பரஞ்சோதி

இணைச்செயலாளர்: கணக்காயர் அர.இராமச்சந்திரன்

பொருளாளர்: டி.கே.நடராசன்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:

கவிஞர் கலி.பூங்குன்றன், வீ.கும ரேசன், சேதுராமசாமி, ச.சேரன், தி.செ.அன்பரசு, வந்தை மு.முனுசாமி, திருச்சி எஸ்.கணேசன், கெ.பக்தவச்சலம் (ஒய்.எம்.சி.ஏ.), கு.முருகேசன், பேராசி ரியர் திருக்குறள் க.பாஸ்கரன், மஞ்சை வசந்தன், என்.சித்துமுருகானந்தம், ஜி.தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner