எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், ஜூன் 7- மாணவர் பருவந் தொட்டு திராவிடர் இயக்கத்தில் பங்கு கொண்ட மூத்த தலைவர் இரா.செழியன் அவர்கள் 95 வயதில் மறைவுற் றார். வேலூர் -மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில் 6.6.2017 செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிஅளவில் காட்பாடி வி. அய்.டி பல்கலைக் கழக வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த, அன்னாரின் உடலுக்கு வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த இரா.செழியன் அவர்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த காலந் தொட்டு திராவிடர் மாணவர் கழகத்தில் ஈடுபட்டவர், இரு பது ஆண்டுகளுக்குமேல் நாடா ளுமன்றத்தில் சிறப்பாக பணி யாற்றி சிறந்த நாடாளுமன்ற வாதி என பெயர் பெற்றவர். மறைந்த நாவலர் நெடுஞ்செழி யன் அவர்களின் தம்பியுமாவார். தமிழக ஜனதாதள தலைவராக வும், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளி லும் பங்குகொண்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் உரையை அன்னாரின் குடும் பத்தினருக்கும், மரியாதை செலுத்தவந்த தோழர்களுக்கும் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈசுவரி, வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சுகுமார், குடியாத்தம் மகளிர் பாசறை தலைவர் சி.லதா, வெண்மதி, தோழர் பிரபு ஆகியோர் மறைந்த இரா.செழியன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner