எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுக்கோட்டை விடுதி, ஜூன் 8- புதுக்கோட்டை விடுதியில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் சிறப்பாக நடந்தது.

4.5.2017 அன்று மாலை 7 மணிக்கு அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடி பக்கம் புதுக்கோட்டை விடுதியில் தந்தை பெரியார் 138ஆவது ஆண்டு பிறந்த நாள் பள்ளித்திடலில் நடந்தது. கழக மகளிரணி அமைப்பாளர் வீ.கலைவாணி, தலைமை கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசு இருவரும் நீண்ட நேரம் உரையாற்றினார் கள். பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு அய்ந்தாயி ரம் பெற்ற மாணவி ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பத்தாவது தேர்வில் 492 மதிப்பெண் பெற்ற தி.அபூர்வா பாராட்டப்பட்டார். மேடையில் அறிமுகம் செய்து பயனாடை அணிவித்து அய்யாவின் அடிச் சுவட்டில் புத்தகம் அளித்து பொதுமக்களின் கையொலிக்கி டையே புதுக்கோட்டை மண்ட லத் தலைவர் இராவணன் பாராட்டினார். நகர மகளிரணி அமைப்பாளரும் மனுநீதி நூல் எரிப்பு போராட்டத்தில் கலந்து சிறை சென்ற கு.செயராணி தலைமை உரையாற்றினார். இராவணன் பேத்தி பெரியார் பிஞ்சு மே.தமிழருவி அனைவ ரையும் வரவேற்று உரையாற்றி னார்.

தொடர்ந்து மண்டலத் தலை வர் இராவணன் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப் பன் மற்றும் பலர் உரையாற்றி னார்கள். பொதுக்கூட்டம் சிறப் படைய, புதுக்கோட்டை விடுதி செயலாளர் வீ.தங்கவேல், தலைவர் வீ.இராமசாமி, நகர துணை செயலாளர் வீ.கருப் பையா மற்றும் நகர தலைவர் சீனிவாசன், நகர ப.க. அமைப் பாளர் துரை.குமார், பெரியார் பிஞ்சுகள் சோபனா, அருண் குமார், இமயவரம்பன் மற்றும் பலர் வருகைத் தந்திருந்தனர். கழகத் தோழர் அர்சுணன் ஒலி பெருக்கி அமைத்து உதவி புரிந் தார். பெரியார் பிஞ்சு நமீதா நன்றி கூறினார்.

திருமயம்

திருமயத்தில் தந்தை பெரி யார் 138ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அடாது மழை யிலும் விடாது நடைபெற்றது

6.6.2017 அன்று புதுக் கோட்டை மாவட்ட கழகம் திருமயம் பெருமாள் கோவில் திடலில் மாலை 6 மணிக்கு துவக்கப்பட்டது. புதுக்கோட்டை நகரச் செயலாளர் தர்மராசு தலைமை ஏற்று பேசினார். அறந்தை மாவட்ட ப.க. தலை வர் செ.அ.தர்மசேகர் வரவேற்பு ரையாற்றினார்கள்.

புதுகை மாவட்ட செயலா ளர் வீரப்பன், மாவட்டத் தலை வர் மு.அறிவொளி, மண்டல தலைவர் இராவணன் ஆகியோர் உரையாற்றியபின் தலைமை கழகப் பேச்சாளர் இராம.அன் பழகன் மழை கொட்டினாலும் பகுத்தறிவுப் பகலவன் தந்திட்ட அரிய கருத்துக்களை கொட்டோ கொட்டென கொட்டினார். மாவட்ட ப.க.தலைவர் சரவ ணன் குடைபிடித்து உதவினார்.

மாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா, ஆகா.எழுமலை, ஏ.இளங்கோ வன், ந.சரவணன், வெங்கட் ராமன் மற்றும் கழகத் தோழர் கள் வருகை தந்திருந்தனர். திரு மயம் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வீர.வசந்தா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner