எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 9 மத்திய பாஜக அரசின் நீட் தேர்வை எதிர்த்து புதுச்சேரி மாநில நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் 3ஆம் கட்ட தெருமுனை பிரச்சாரம் 7.6.2017 அன்று மாலை 4.30 மணியளவில் முத்தியால்பேட்டை மார்கெட் அருகில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில நீட் எதிர்ப்பு நட வடிக்கை குழு வின் ஒருங்கிணைப்பாளர் மாநில திராவிடர் கழக தலை வர் சிவ.வீரமணி தலைமையில் நடை பெற்றது. தெருமுனை பிரச்சாரத்தில் புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தோழர் ச.முருகன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில விவ சாய அணி செயலாளர் தோழர் கீதநாதன், மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் பஷீர் அகமது, புதுச்சேரி சமூக நீதி பேரவை துணைத் தலைவர் நவீன் தனராமன், புதுச்சேரி மாநில மாணவர் கூட்ட மைப்பின் தலைவர் சாமிநாதன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம் ஆகியோர் நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி உரையாற்றினர். முத்தியால் பேட்டை மார்கெட் பகுதியில் தொடங் கிய தெருமுனை பிரச்சாரக் கூட்டம், மணிகூண்டு, பாக்கமுடையான் பேட்டை சந்திப்பு, லாஸ் பேட்டை நேதாஜி நடத்தப் பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக புதுச் சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு, புதுச்சேரி நகராட்சி கழக அமைப் பாளர் மு.குப்புசாமி, செயலாளர் த.கண் ணன், உழவர்கரை நகராட்சி கழக அமைப் பாளர் ஆ.சிவ ராசன், புதுச்சேரி மாணவர்கள் கூட்ட மைப்பு பொறுப்பாளர்கள் முரளி, புவி, சுதர்சன், பிரசாந்த், தியாகு மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரச்சார பயணத்தை தோழர் இராசாங் கம் முடித்து வைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner