எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாளையங்கோட்டை, ஜூன் 11- காட்டுமன்னார்குடி வட்டம் பாளையங்கோட்டை கடை வீதியில் 31.5.2-17 அன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 138ஆவது பிறந்த தின பொதுக்கூட்டம், ஒன்றிய கழக தலைவர் க.பெரியண்ணசாமி தலைமை யில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்கநாதன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் அ.தமிழரசன், சூசை, காட்டுமன்னை ஒன் றிய கழக செயலாளர் மு.குண சேகரன், அரங்க.கருணாநிதி, கெழை கழகத் தலைவர் ஆர். இராசசேகரன் ஆகியோர் முன் னிலை ஏற்றனர். மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர் உரையாற்றினர்.

தலைமைக்கழகப் பேச்சா ளர் யாழ்.திலீபன் தன் சிறப்பு ரையில் பி.ஜே.பி., ஆர்.எஸ். எஸ். அமைப்புகளின் இந்துத் துவா கொள்கைகளைக் கண் டித்தும், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை நுழைய விடக் கூடாது என்பது குறித்தும், தந்தை பெரியாரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண் டும் என்பதின் நோக்கத்தையும் திமுக தலைவர் கலைஞரின் வைர விழா சிறப்பு குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.

இறுதியில் ஒன்றிய கழக செயலாளர் மு.குணசேகரன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner