எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சாலைவேம்பு, ஜூன் 14- மேட்டுப் பாளையம் மாவட்டம் சாலை வேம்பில் கழகக் குடும்ப விழா திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப் பையன் இல்லத்தில் 11.6.2017 இல் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. மேட் டுப்பாளையம் மாவட்ட செய லாளர் அர.வெள்ளிங்கிரி வர வேற்புரையாற்றினார். மேட் டுப்பாளையம் மாவட்ட தலை வர் சு.வேலுசாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் ச.சிற்றரசு, கோவை மண்டல செயலாளர் சந்திர சேகர், கோவை பெரியார் பெருந் தொண்டர் கண்ணன், பெரியார் வீரவிளையாட்டுக்குழு துணை செயலாளர் ப.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன், வழக்குரை ஞர் நம்பியூர் சென்னியப்பன் ஆகியோர் உரைக்குப்பின் தலைமைக்கழக பேச்சாளர் கோபி.குமாரராசா சிறப்புரை யாற்றினார்.

மாட்டுக்கறி உணவின் அவ சியம் குறித்தும், அதை வைத்து பி.ஜே.பி. நடத்துகின்ற அரசி யல் குறித்தும், மாட்டுக்கறி குறித்து விவேகானந்தர் கூறிய கருத்துகளையும் தொகுத்து உரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், மற்றும் ஊர்ப் பொதுமக்களுக்கும் மாட் டுக்கறி பிரியாணி சாலைவேம்பு சுப்பையன் மற்றும் சாவித்திரி குடும்பம் சார்பாக வழங்கப் பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சாலை வேம்பு சுப்பையன் அவர்களின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இக்குடும்ப நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுகி.கலையரசன், வை.குடிய ரசு, பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்கள் திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன், மேட்டுப்பாளையம் அமைப் பாளர் செல்வராசு, கள்ளக்கரை வெங்கட்ராமன், திராவிடமணி, ஆணைகட்டி சம்பத், ரங்கசாமி (சிபிஅய்), கழக மேனாள் மாவட்ட தலைவர் பா.பால சுப்ரமணியன், குரு விஜயகாந்த், சம்பத், காரமடை ஒன்றிய கழக தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி தலைவர் அறிவு மணி, அன்புமதி, தமிழரசு, வே. வீரமணி, திராவிட முன்னேற்ற கழகத் தோழர் குணசேகரன், கோவை பிரபு, பிரபாகரன், கவிஞர் கவி.கிருட்டிணன் உள்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner