எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருஷ்ணராயபுரம், ஜூன் 14- கரூர் மாவட்டம் கட்டளையில் பெரி யார் சிலை அமைப்பது, வாழ் வியல் சிந்தனைகள் 12ஆம் பாகம் வெளியீடு குறித்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.6.2017 அன்று நடை பெற்றது.

கரூர் மாவட்ட கட்டளை யில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் உ.வைரவன் தோட்ட வீட்டில் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து பேசினார். மண்டல தலைவர் ந.ஆரோக் கியராஜ் முன்னிலை ஏற்றார். தலைமை செயற்குழு உறுப்பி னர் உரத்தநாடு இரா.குண சேகரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கட்டளை கிராமத்தில் தந்தை பெரியார் சிலை வைப்பது சம்பந்தமாக சிலை அமைப்பு குழுவை அறிவித்தார். ஒரு மாதத்தில் பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலம் வாங்கி கட்டளை கிரா மத்தில் படிப்பகத்துடன் பெரி யார் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். கரூர் மாவட் டத்தில் தெருமுனைப் பிரச்சா ரக் கூட்டம் இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் நடத் தப்படும்.

கூட்டத்தின் தலைப்பை அறிவித்தார். 1.அழைக்கின்றார் பெரியார் எனும் தலைவர், 2.பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம், இனப்பகையை ஒழிப்போம் சிறப்புக் கூட்டம் நடைபெறும். கட்டளையில் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் திறந்து வைக்க உள்ளார் என் றும் பேசினார்.

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12 புத்தகத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன் வெளியிட திமுக தொழிற்சங்க தலை வர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ம.கண்ணதாசன் பெற் றுக் கொண்டார்.

தீர்மானங்கள்:

1. பொதுக்குழு உறுப்பினர் பாரதமணி, தாந்தோணி ஒன் றிய துணை செயலாளர் பெரி யார் நகர் முத்துவீரன் ச.காம ராசு ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2. 16.4.2017 அன்று மாலை திருச்சி மாவட்டம் லால்குடி யில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரி யர் முன்பு தாமாகவே முன் வந்து பெண்களின் அடிமைச் சங்கலி தாலியை அறுத்து அகற்றிய மாவட்ட மகளிர் அணி செயலாளர் தோழியர் தங்கம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ம.கு.கணே சன் வாழ்விணையரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம்.

3. மாவட்ட மாணவர் கழ கப் பொறுப்பாளர்கள் தலை வர்: பெ.பெரியார் செல்வம், செயலாளர்: கு.க.கவிரயசு ஆகி யோர் புதிதாக நியமித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

4. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தத்துவங்களை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமம் தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

5. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை கட்ட ளையில் அமைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து திறப்பு விழா நடத்த வது எனவும் தீர்மானிக்கப்படு கிறது.

6. கட்டளையில் பெரியார் சிலை அமைப்பது தொடர்பாக சிலை அமைப்பு குழு கீழ்க் கண்டவாறு அமைக்கப்படு கிறது.

ஒருங்கிணைப்பாளர்: ப.குமாரசாமி (மாவட்ட தலை வர்), ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்), கவிஞர் பழ. இராமசாமி (பொதுக்குழு உறுப்பினர்).

புரவலர்: ம.கண்ணதாசன் (விடுதலை வாசகர் வட்ட தலைவர்)

தலைவர்: உ.வைரவன், செயலாளர்: இரா.பெருமாள், பொருளாளர்: மு.ஸ்டாலின், கழக செயற்குழு உறுப்பினர் கள்: இராமலிங்கம், விடுதலை, பெரியார் செல்வம், சுப்பிர மணி, ராஜாமணி (மாவட்ட மகளிர் அணி தலைவர்), கந்தசாமி, வீரமணி, திருப்பதி.

துணைத் தலைவர்கள்: பாண்டியன், முத்து, தண்ட பாணி, நடேசன், காமராசு, முத்துசாமி.

துணைச் செயலாளர்கள்: அய்.பி.எஸ்.ராஜா, தங்கராசு, சாக்ரடீஸ், ரூசோ, கிருட்டிணன் ஆகியோர் நியமித்து தீர்மானிக்கப்படுகிறது.

கலந்து கொண்டோர்:

பொதுக்குழு உறுப்பினர்கள் கவிஞர் பழ.இராமசாமி, சே. அன்பு, மாநில வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் மு.க.இராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் வே.ராஜூ, நகர செயலாளர் ம.சதாசிவம், இளைஞர் அணி தே.அலெக்ஸ், ம.செகநாதன், கவுதமன், கார்த்தி, சாக்ரடீஸ், ரூசோ, நே.பூபதி, பெருமாள், காலனி கிருஷ்ணன், கணேசன், மகளிர் அணி அமைப்பாளர்கள் தி.ராஜாமணி, லட்சுமீ, சிவகாமி, அம்பிகா, துரை கந்தசாமி, ராஜா, ராதா கிருஷ்ணன், நன்றிரை கட்டளை வைரவன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner