எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநாகேஸ்வரம், ஜூன் 15- குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதுர் ஒன்றிய செயலாளர் ந.முருகானந்தம் மற்றும் ஒன்றிய பிரதிநிதி ந.சிவக்குமார் ஆகியோரின் தாயாரும் காங்கிரஸ் பேரியக்க தியாகி ஆ.நடராஜன் அவர்களின் துணைவியாருமான யசோதை அம்மாள் அவர்களின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்இராசகிரி கோ.தங்கராசு அவர்களது தலை மையில், திருநாகேஸ்வரம் விஎஸ்ஆர் திருமணமஹாலில் 11.06.2017, ஞாயிறுகாலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நகர திமுக செயலாளர் சீ.தாமரைச்செல் வன், த.மா.கா. மாவட்ட பிரதிநிதி பி.என்.இந்திரஜித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குடந்தை கழக மாவட்ட தலைவர் கு.கவு தமன், மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், பகுத் தறிவாளர் கழக வெளிமாநில முன்னாள் தொடர்பு செயலாளர் தி.இராசப்பா, திருவாரூர் மண் டல தலைவர் ராயபுரம் கோபால், உள்ளாட்சிநிதி தணிக்கைத் துறை உதவி ஆய்வர் சு.விஜய குமார், குடந்தை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, நாச்சியார் கோவில் கழகத் தலைவர் சி.முத்துகுமார சாமி, குடந்தை நகர கழகத்  தலைவர் பீ.ரமேசு, திருவிடை மருதூர் ஒன்றிய கழக துணைத் தலைவர் எம்.என்.கணேசன், நகர அதிமுக செயலாளர் எஸ். சிங்காரவேலு, மாவட்ட த.மா.கா. இளைஞரணி செயலாளர் எஸ். மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ் வுரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண் டவர்கள் குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக் குமார், மாவட்ட வழக்குரைஞ ரணி செயலாளர் இரா.அழகிய மணாளன், குடந்தை நகர செய லாளர் ந.காமராஜ், நாச்சியார் கோவில் கழக பொறுப்பா ளர்கள் ஆசைத்தம்பி, வே. குணசேகரன், குமாரமங்கலம் அ.சங்கர், திருநாகேஸ்வரம் நகர கழக பொறுப்பாளர்கள் அ.மொட்டையன், திராவிட பாலு, பவுண்ட்ரீகபுரம் முரு கேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து கட்சி நகர பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி யில் இறுதியில் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சியின் நோக்கத்தை பற்றி பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் இராச கிரி கோ.தங்கராசு பேசும்போது யசோதை அம்மாளின் சிறப் பினை விளக்கி நிறைவுரையாற் றினார்.

குடந்தை மாவட்ட துணைச்செயலாளர் கு.நிம்மதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். குடும்பத்தினார் சார்பாக அம் மையாரது மகனும், திராவிடர் கழக பொறுப்பாளருமாகிய

ந.சிவக்குமார் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner