எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவிடைமருதூர், ஜூன் 21- குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 18.6.2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் திரு நாகேஸ்வரம் கழக தோழர் எம்.என்.கணேசன் இல்லத்தில் குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு தலைமையிலும், திருவிடை மருதூர் ஒன்றிய செயலாளர் ந. முருகானந்தம்  முன்னிலையி லும் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர்கள்: கடவுள் மறுப்பு: வி.திராவிட பானு, வரவேற்புரை: ஆசிரியர் அறிவுமணிமுருகேசன் பவுண் டரீகபுரம், கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கத்தை விளக்கி துவக்க உரை: குடந்தை க.குரு சாமி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மற்றும் கு.முரு கேசன் பவுண்டரீகபுரம், நாச்சி யார்கோயில் கழக பொறுப்பா ளர்கள் சி.முத்துகுமாரசாமி, வீ. பிரபாகரன், பா.கவுதம், வெ.பார்த்திபன், அ.சங்கர், ஜி.முரு கன், நா.ஆசைத்தம்பி, வே.குண சேகரன் மற்றும் திருநாகேஸ் வரம் கழக பொறுப்பாளர்கள் எம்.என்.கணேசன், ந.சிவக் குமார், அ.சிவானந்தம், டி. அம்பிகாபதி, அ.மொட்டையன், க.தீலிபன், பெரியார் பிஞ்சு செ.தி.விடுதலை ஆகியோரும் குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் கு.நிம்மதி, குடந்தை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் எம்.திரிபுரசுந் தரி, குடந்தை நகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேசு, குடந்தை மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர் கு.செல்வ குமார் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இறுதியாக குடந்தை மாவட்ட தலைவர் கு.கவுதமன் கழக பணிகள் குறித்து சிறப்புரை யாற்றினார். திருநாகேஸ்வரம் கழக தோழர் வி.திராவிடர் பாலு நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தீர்மானம் -1: இரங்கல் தீர் மானம்

திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் ஆ.சுப்பிரமணியன், திருவிடை மருதூர் ஒன்றிய தலைவர் பெரியார் பெருந்தொண்டர் கலியமூர்த்தி, திருவிடைமரு தூர் ஒன்றிய செயலாளர் நா. முருகானந்தம் அவர்களின் தாயார் யசோதை அம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இந்த கலந்துரையாடல் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறது.

தீர்மானம் - 2: திருவிடைமரு தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழகங்களை புதுப்பிப் பது, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் - 3: திருவிடைமரு தூர் ஒன்றியத்திற்குட்பட்ட முக் கிய பகுதிகளான நரசிங்கம் பேட்டை, ஆடுதுறை, திரு விடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், நாச்சியார் கோயில், பவுண்டரீகபுரம் ஆகிய இடங்களில் உடனடி யாக தொடர் பிரச்சாரக்கூட் டங்களை நடத்துவதென தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் -4: கழக தோழர் கள் வீடுகள் தோறும் விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய கழக ஏடுகளை வாங்குவது எனவும் மற்றவர் களையும் வாங்க ஏற்பாடு செய் வதெனவும் தீர்மானம் செய்யப் பட்டது.

தீர்மானம் 5: கீழ்க்காணும் தோழர்கள் புதிய பொறுப்பா ளர்களாக ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்படுகின்றனர்.

புதிய பொறுப்பாளர்கள்

திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்: எம்.என்.கணேசன், திருநாகேஸ்வரம்.

திருவிடைமருதூர் ஒன்றிய. துணைத் தலைவர்: நா.ஆசைத்தம்பி, மாத்தூர்.

திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்: ந.முருகானந்தம், திருநாகேஸ்வரம்.

திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர்: வே. குணசேகரன், திருநரையூர்.

திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்: அ.சங்கர், குமாரமங்கலம்.

திருநாகேஸ்வரம் பகுதி அமைப்பாளர்: கு.முருகேசன், பவுண்டரீகபுரம்

நாச்சியார்கோயில் பகுதி அமைப்பாளர்: வெ.பார்த் திபன், நாச்சியார்கோயில்.

நாச்சியார்கோயில் நகர செயலாளர்: வீ.பிரபாகரன், நாச்சியார்கோயில்.

நாச்சியார்கோயில் இளைஞ ரணி செயலாளர்: பா.கவுதம், நாச்சியார்கோயில்.

திருநாகேஸ்வரம் நகர தலைவர்: மொட்டையன், திரு நாகேஸ்வரம்.

திருநாகேஸ்வரம் நகர செய லாளர்: வீ.திராவிடர் பாலு, திருநாகேஸ்வரம்.

திருநாகேஸ்வரம் நகர துணைச் செயலாளர்: ஆ.சிவா னந்தம், திருநாகேஸ்வரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner